ஆரவ் எல்லாம் பிக்பாஸ் டைட்டில் வின்னரா இதெல்லாம் அநியாயம் ட்விட்டரில் கருத்து சொன்ன நடிகை கஸ்தூரி
சென்னை: நேற்று நடைபெற்று முடிந்த ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவில் வெற்றி பெற்ற நடிகர் ஆரவை, சமூக வலைத்தளமான டிவிட்டரில் நடிகை கஸ்தூரி கிண்டல் செய்து பதிவிட்டுள்ளார்.
100 நாட்களாக தொடந்து வந்த ரியாலிட்டி ஷோவான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்றுடன் முடிந்து விட்டது. இறுதிச்சுற்று வரை வந்த ஆரவ் மற்றும் ஸ்நேகன் இருவரில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் வெற்றியாளராக ‘மருத்துவ முத்தம்’ கொடுத்து புகழ்பெற்ற ஆரவ் அறிவிக்கப்பட்டார்.
கவிஞர் ஸ்நேகன் அல்லது நடிகர் கணேஷ் வெங்கடராமன் ஆகிய இருவரில் ஒருவர் ஜெயிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ஆரவின் வெற்றி எதிர்பாராத ஒன்றாக அமைந்தது.
இந்நிலையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் சமூக வலைத்தளங்களில் அதனைக் குறித்த விமர்சனங்கள் எழும்பின. அதில் நடிகை கஸ்தூரியும் ஒருவர். அவர் டிவிட்டரில் நடிகர் ஆரவ் வெற்றியாளராகத் தேர்தெடுக்கப்பட்டிருந்ததை ‘அநியாயம் என்று விமர்சித்து இருந்தார்.தன்னுடைய கருத்துக்கு வலுசேர்க்கும் படி நடிகர் வடிவேலுவின் படம் ஒன்றிணையும் அவர் இணைந்திருந்தார்