SRH vs MI : வெற்றிப்பாதையை தொடருமா மும்பை? பேட்டிங் களத்திற்கு தயாரான ஹைதராபாத்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

SRH vs MI - IPL 2025

ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாட உள்ளன. இப்போட்டி ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

முதல் 5 போட்டியில் 4-ல் தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் இறுதி கட்டத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்தடுத்து 3 போட்டிகளில் தொடர் வெற்றியை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. SRHக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் முனைப்பில் மும்பை அணி விளையாடும்.

இந்த சீசனில் 7 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் உள்ள ஹைதராபாத் அணி இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பு கிடைக்கும் என்பதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என விளையாடும்.

இப்படியாக பரபரப்புக்கு பஞ்சமில்லாத இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதரபாத் :

பாட் கம்மின்ஸ் தலைமையில் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென்(விக்கெட் கீப்பர்), அனிகேத் வர்மா, ஹர்ஷல் படேல், ஜெய்தேவ் உனத்கட், ஜீஷன் அன்சாரி, எஷான் மலிங்கா ஆகியோர் விளையாட உள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் :

ஹர்திக் பாண்டியா தலைமையில் ரியான் ரிக்கல்டன்(விக்கெட் கீப்பர்), வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, நமன் திர், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், டிரெண்ட் போல்ட், ஜஸ்பிரிட் பும்ரா, விக்னேஷ் புதூர் ஆகியோர் விளையாட உள்ளனர். ரோஹித் சர்மா இம்பேக்ட் பிளேயராக களமிறங்க உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்