”பஹல்காம் தாக்குதலுக்கு தங்களுக்கும் தொடர்பில்லை” – பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்.!
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கும் தங்கள் நாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் அரசு விளக்கம் அளித்துள்ளது.

நாட்டையே உலுக்கிய ஜம்மு-காஷ்மீர் பாஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கர பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒரு நாள் கழித்து, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், “பாகிஸ்தானுக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை” என்று அவர் விளக்கம் அளித்தார்.
இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதிகள் மீது, குற்றம் சாட்டுவது குறித்து இந்தியத் தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ கருத்துக்களும் வெளியாகவில்லை.இதனிடையே, எல்லைப் பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவும் சூழலில், பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான விமானங்களை அந்நாட்டு அரசு தயார் நிலையில் வைத்துள்ளது என்று தகவல் வந்துள்ளது.
சொல்லப்போனால், பாகிஸ்தான் முழுவதும் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானின் லைவ் 92 செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியளித்த ஆசிப், “பாகிஸ்தானுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. இவை அனைத்தும் உள்நாட்டில் வளர்க்கப்பட்டவை, இந்தியாவிற்கு எதிராக பல்வேறு மாநிலங்கள் என்று அழைக்கப்படும் இடங்களில் தாக்குதல் நடந்துள்ளன. ஒன்றல்ல, இரண்டல்ல, டஜன் கணக்கானவை. நாகாலாந்து முதல் காஷ்மீர் வரை, தெற்கில், சத்தீஸ்கர், மணிப்பூரிலும் கூட நடந்துள்ளது.
இந்த எல்லா இடங்களிலும், இந்திய அரசாங்கத்திற்கு எதிரான தாக்குதல்கள் நடந்துள்ளன” என்று கூறினார். “இந்த சம்பவத்திற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எந்த சூழ்நிலையிலும் நாங்கள் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை, மேலும் எந்தவொரு உள்ளூர் மோதல்களிலும் அப்பாவி மக்கள் எங்கும் இலக்காகக் கூடாது. காஷ்மீர் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் இறந்தது வருத்தமளிக்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்” என்று அவர் கூறினார்.
We have absolutely nothing to do with it. We reject terrorism in all its forms and everywhere, says Pakistan’s Defence Minister Khawaja Asif on the #Pahalgam attack.#pahalgamattack pic.twitter.com/qGiTz6uVOn
— Ghulam Abbas Shah (@ghulamabbasshah) April 23, 2025