பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகள்? விமானம் மூலம் தேடுதல் வேட்டையில் இந்திய ரானுவம்!
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காம் என்ற இடத்தில் 4 முதல் 6 பயங்கரவாதிகள் மறைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின் படி மொத்தம் 26 பேர் உயிரிழந்ததாகவும் அதில், 20 க்கும் மேற்பட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள், இரண்டு உள்ளூர் மக்கள், ஒரு எமிரேட் மற்றும் ஒரு நேபாள நாட்டவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 4 முதல் 6 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் மலைப்பகுதிகளில் மறைந்திருக்க வாய்ப்புள்ளதால், இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகள் ஹெலிகாப்டர்களின் உதவியுடன் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
பயங்கரவாதிகளின் இருப்பிடத்தைத் துல்லியமாகக் கண்டறியவும், அவர்களை நடவடிக்கை எடுக்கவும் உயர்நிலை உளவு மற்றும் வான்வழி கண்காணிப்பு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி அதற்கான வேலைகளிபோல் ஈடுபடவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும், ராணுவம் பயன்படுத்தும் ஹெலிகாப்டர்கள் மலைப்பகுதிகளில் பறந்து, கீழே உள்ள இடங்களை கண்காணிக்கின்றன. இவை இரவிலும் பார்க்கக்கூடிய கேமராக்கள் மற்றும் வெப்பத்தைக் கண்டறியும் கருவிகளைக் கொண்டவை. இதனால் பயங்கரவாதிகள் எங்கு மறைந்திருக்கிறார்கள் என்பதை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். மேலும், ஆளில்லா சிறிய விமானங்களும் (ட்ரோன்கள்) தகவல் சேகரிக்க உதவுகின்றன.
பஹல்காம் பகுதி மலைப்பகுதி, அடர்ந்த காடுகள் நிறைந்தது. இதனால் பயங்கரவாதிகளைக் கண்டுபிடிப்பது கஷ்டம். அவர்கள் குகைகளிலோ, மரங்களுக்கு இடையிலோ மறைந்திருக்கலாம். மேலும், அங்கு சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் இருப்பதால், ராணுவம் மிக கவனமாக செயல்பட வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. ராணுவம் இந்த தேடுதல் வேட்டையை தொடர்ந்து செய்து, பயங்கரவாதிகளை விரைவில் அவர்களை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.