PahalgamAttack : ஜம்மு காஷ்மீர் தாக்குதல்…மனதை உலுக்கும் காட்சிகள்!

ஜம்மு காஷ்மீர் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பிரதமர் மோடி, தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து, குற்றவாளிகளை கண்டறிந்து தண்டிக்க உறுதியளித்துள்ளார்.

Pahalgam Attack videos

ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பராபரையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் தற்போது வரை கிடைத்த தகவலின் படி சம்பவத்தில் 26 பேர் உயிரிழந்த நிலையில், அதில் 20 க்கும் மேற்பட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள், இரண்டு உள்ளூர் மக்கள், ஒரு எமிரேட் மற்றும் ஒரு நேபாள நாட்டவர் இறந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன, இது மேற்கு வங்க கலவரத்தில் தலைவர்கள் கைதுக்கு எதிரான பதிலடியாக இருக்கலாம் எனவும் தகவல்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது. தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய இராணுவம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் கூட்டு நடவடிக்கையில், பைசரான் பகுதியில் தீவிரவாதிகளை தேடும் பெரிய அளவிலான தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், சம்பவம் நடைபெற்றபோது அங்கிருந்தவர்கள் எடுத்த வீடியோக்காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் பலருடைய மனதையும் உலுக்கியது என்றால் புதிதாக திருமணமான இளம் கடற்படை அதிகாரி ஒருவர் தனது மனைவிக்கு முன்பே கொல்லப்பட்ட சம்பவம் தான்.

உயிரிழந்த கடற்படை  அதிகாரி லெப்டினன்ட் வினய் நர்வால் ஏப்ரல் 19 அன்று திருமணம் செய்து கொண்டு தேனிலவுக்காக மனைவியுடன்  அங்கு சென்றிருந்தார். அந்த சமயம் தாக்குதல் நடைபெற்ற நிலையில், அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். கணவரின் உடலை பார்த்து மனம் வாடி அவருடைய பக்கத்தில் மனைவி அமர்ந்திருக்கும் புகைப்படம் பலருடைய மனதையும் உலுக்கியுள்ளது.

அதைப்போல தாக்குதல் நடந்தபோது எடுக்கப்பட்டதாகவும் ஒரு வீடியோ வைரலாகி கொண்டு இருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்