கைவிட்ட அணியை கதறவிட்ட கே.எல்.ராகுல்! ஷாக்கான லக்னோ உரிமையாளர்?
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடிய டெல்லி வீரர் கே.எல்.ராகுல் 42 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார்.

லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம் இருந்து விரக்தியை பெற்றுக்கொண்டார் என்று சொல்லலாம். லக்னோ உரிமையாளர் அவரை கடுமையாக திட்டும்படியான புகைப்படங்களும் வெளியாகி மிகவும் வைரலானது. அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு அதாவது இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளின் மெகா ஏலத்தின் போது லக்னோ நிர்வாகம் கே.எல்.ராகுலை விடுவித்து ரிஷப் பண்டை ரூ.27 கோடி கொடுத்து கேப்டனாகிக்கியது.
இந்த சூழலில், எப்போது லக்னோ அணிக்கும் கே.எல்.ராகுல் தற்போது விளையாடும் டெல்லி அணிக்கும் போட்டி வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்த அந்த போட்டியானது நேற்று லக்னோவில் நடைபெற்றது. இந்த போட்டியில், எல்.எஸ்.ஜி. முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்ததாக களமிறங்கிய டெல்லி அதிரடியாக தொடங்கியது.
அதிலும் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் கே.எல்.ராகுல் தன்னையா விடுகிறீர்கள்? என்பது போல கேட்டு கேட்டு ஒவ்வொரு பந்துகளையும் அடித்தது போல இருந்தது. 3 பவுண்டரி , 3 சிக்ஸர்கள் என அரைசதம் அவர் விளாசிய நிலையில் டெல்லி அணி இந்த போட்டியில் 17.5 ஓவர்களில் 161 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. கே.எல்.ராகுல் அதிரடி ஆட்டத்தை பார்த்து லக்னோ உரிமையாளர் சற்று ஷாக் ஆகிவிட்டார்.
இந்த வெற்றியை விட, போட்டிக்குப் பிறகு கே.எல்.ராகுல் மற்றும் எல்.எஸ்.ஜி. உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா இடையே நடந்த ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போட்டி முடிந்த பிறகு, மைதானத்தில் கோயங்கா ராகுலை நோக்கி வேகமாக சென்று கை கொடுத்து சிரித்தபடி வாழ்த்துக்களை தெரிவிக்க சென்றார். கே.எல்.ராகுலும் அவரை பார்த்துக்கொண்டு கையை குலுக்கினார். ஆனால், அவருடைய உடல் பாவனை என அனைத்தும் சற்று கெத்தாக இருந்தது என்று சொல்லலாம்.
கை கொடுத்து கோயங்கா எதோ பேச முயன்ற நிலையில், கே.எல்.ராகுல் கையை மட்டும் கொடுத்துவிட்டு கண்டுகொள்ளாதபடி வேகமாக மற்ற வீரர்களுக்கு கை கொடுக்க சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Sanjiv Goenka tried to interact with KL Rahul but he quickly went away from him. 🙅♂️😮#LSGvsDC | #KLRahulpic.twitter.com/L1PeKiKKZW
— Indian Cricket Team (@incricketteam) April 22, 2025
லேட்டஸ்ட் செய்திகள்
‘அந்த இடத்திற்கு செல்லாததால் தப்பிய தமிழர்கள் 68 பேர்’ – சுற்றுலா சென்ற மதுரை நபர் சொன்ன தகவல்.!
April 23, 2025
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025