காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்….தற்போதைய நிலை என்ன?

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தீவிர தாக்குதலில் பாதிக்கப்பட்டர்களின் விவரங்களை அறிய உதவி எண்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Pahalgam Attack

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர், ஆனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பல சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு உலக அரசியல் தலைவர்கள் வரை பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கண்டனம் தெரிவித்ததோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேர சிறப்பு உதவி மையத்தை தொடங்க உத்தரவிட்டார், இது 011-24193300 மற்றும் 9289516712 என்ற எண்களில் செயல்படுகிறது.

தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன, இது மேற்கு வங்க கலவரத்தில் தலைவர்கள் கைதுக்கு எதிரான பதிலடியாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த சம்பவம் நடைபெற்ற உடனே சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார், மற்றும் இராணுவம் தீவிரவாதிகளை தேடி தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

தற்போதைய நிலை…

ஏற்கனவே, இந்த சம்பவத்தில் 20 பேருக்கும் மேல் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின் படி உயிரிழப்பு எண்ணிக்கை 26-ஆக உயர்ந்திருப்பதாக தகவலை தெரிவித்துள்ளது. இதில் 23 இந்திய சுற்றுலாப் பயணிகள், இரண்டு உள்ளூர் மக்கள், மற்றும் ஒரு எமிரேட் மற்றும் ஒரு நேபாள நாட்டவர் அடங்குவர். பலர் படுகாயமடைந்தனர், இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 83 வயது முதியவர் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த 65 வயது பெண்மணி உள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

இந்திய இராணுவம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் கூட்டு நடவடிக்கையில், பைசரான் பகுதியில் தீவிரவாதிகளை தேடும் பெரிய அளவிலான தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது. பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, வாகன சோதனைகள் நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PahalgamTerroristAttack live
Kashmir Attack
Go tell this to Modi
Sketches of terrorists
Terrorist Attack
j&k terror attack
trapped in Kashmir terror