சென்னை அவ்வளவுதான்..கோப்பை ஆர்சிபிக்கு தான்..அந்தர் பல்டி அடித்த அம்பதி ராயுடு!
இந்த வருடம் பெங்களூர் சிறப்பாக விளையாடி வருவதாக அம்பதி ராயுடு சமீபத்திய பேட்டி ஒன்றில் புகழ்ந்து பேசியுள்ளார்.

சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற போகிறது எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது. நடப்பாண்டு அணிகளின் பார்ம் வைத்து பார்க்கையில் ஹைதராபாத் மற்றும் சென்னை அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு தான். ஏனென்றால், தொடர்ச்சியாக தோல்வி அடைந்து புள்ளி விவரப்பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் இந்த அணிகள் உள்ளது.
எனவே, கோப்பை எந்த அணி வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. இந்த சூழலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களுக்கு பிடித்த அணிகளின் பெயர்களை சொல்லி இந்த அணி தான் கோப்பயை வெல்லப்போகிறது என தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அப்படி தான் சென்னை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு இந்த முறை கோப்பை பெங்களூர் அணி தான் வெல்லும் என பேசியிருக்கிறார்.
தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய அவர் ” பெங்களூர் அணி இந்த சீசன் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இப்படியான பார்மில் அவர்கள் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தார்கள் என்றால் நிச்சயமாக அவர்களை வீழ்த்துவது என்பது கடினமான ஒரு விஷயமாக இருக்கும் என்று நான் சொல்வேன். என்னைப்பொறுத்தவரை இந்த ஆண்டு கோப்பையை வெல்லவேண்டும் என்றால் அது பெங்களூர் அணியாக கூட இருக்கலாம். ஏனென்றால், அந்த அளவுக்கு சிறப்பாக விளையாடி வருகிறது.
சென்னை அணி கோப்பையை வெல்லும் தோனிக்கு இது கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால், இல்லை. இப்போது சென்னை அணி சரியாக இல்லை என்பதால் இது கொஞ்சம் சிரமம் என்று நினைக்கிறேன். எனவே, பெங்களூர் கோப்பையை வென்றால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்” எனவும் அம்பதி ராயுடு தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த பேட்டிக்கு முன்னதாக ஒரு பேட்டியில் அவர் ” பெங்களூர் ஆனால் கோப்பையை வெல்ல முடியாது ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி பொழுதுபோக்காக வேண்டுமென்றால் விளையாடமுடியும்…இந்த ஆண்டு சென்னை தான் கோப்பையை வெல்லும்” என பேசியிருந்தார். ஆனால், தற்போது அப்படியே அந்தர் பல்டி அடித்து வேறுமாதிரி அம்பதி ராயுடு பேசியிருக்கிறார்.