அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி பலமாக இருப்பதாக திருமாவளவன் சொல்லிவிட்டார்.. – தமிழிசை பேச்சு!
திமுகவினரால்தான் திருமாவளவன் மன அழுத்தத்தில் இருப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் ” ஒரு சிலர் திமுகவை மட்டுமே நம்பி இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். திமுக கூட்டணியை பலவீனப்படுத்த அவர்களிடம் உள்ள ஒரே துருப்புச் சீட்டு விசிக தான். அதன் காரணமாக தான் இப்படி பேசிக்கொண்டு வருகிறார்கள்.எந்த எதிர்பார்ப்புமின்றி கூட்டணியில் தொடர்கிறோம் என்றால் துணிவு, தெளிவு வேண்டும் . தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் விசிகவால் எடுக்க முடியும் எனவும் பேசியிருந்தார்.
அதைப்போல, விசிக நிர்வாகிகள் அழுத்தம் கொடுத்து விழாக்களில் பங்கேற்க செய்வது வேதனை அளிப்பதாகவும், ஆளுங்கட்சியுடனான முரண் என்பது வேறு, கூட்டணி கொள்கை வேறு என்பதை நிர்வாகிகள் உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும் திருமாவளவன் வெளிப்படையாகவே பேசியிருந்தார்.
எனவே, இந்த சூழலில் சென்னை தாம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திருமாவளவன் இப்படி பேசியிருக்க கூடாது என தெரிவித்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” பாஜக – அதிமுக பற்றி கூட்டணியை கேள்வி கேட்கும், திமுக இப்போது கூட்டணி குழப்பத்தில் இருப்பதாகவே நான் நினைக்கிறன். ஏனென்றால், அண்ணன் திருமாவளவன் முகவால் தான் மன அழுத்தில் இருக்கிறார் என நான் கருதுகிறேன். திருமாவளவன் மன அழுத்தத்தோடு இருக்கக் கூடாது என சகோதரியாக நான் வேண்டிக் கொள்கிறேன்.
யாருக்குமே மன அழுத்தம் இருக்கவே கூடாது. நான் எதற்காக திமுகவால் விசிக மன அழுத்தத்தில் இருப்பதாக நினைக்கிறேன் என்று சொன்னார். தினம்தோறும் கொடியேற்றி பழகிய அவர்களுடைய தொண்டர்களுக்கு இப்போது கொடிகூட ஏற்றமுடியவில்லை என மனத்தாங்களாக அவர்கள் சொல்லிருக்கிறார்கள். அது மட்டுமின்றி திமுகவை மட்டுமே நம்பி நாங்கள் இல்லை எனவும் அவர் சொல்லியிருக்கிறார்.
எனவே, அதிமுக -பாஜக கூட்டணியை விமர்சனம் செய்யும் எல்லாரும் திமுக கூட்டணி குழப்பத்தில் இருக்கிறது என்று தான் நான் சொல்வேன். துணை முதல்வர் என்று போஸ்டர் ஒட்டிய செல்வப்பெருந்தகை மறைமுகமாக எச்சரிக்கைப்பட்டு போஸ்டர்கள் நீக்கப்பட்டு வருகிறது. அதைப்போல வேல்முருகன் இன்றைக்கு அப்படி பேசவா இப்படி பேசவா? என்று இருக்கிறார். அதைப்போல திருமாவளவனும் மன அழுத்தத்தை தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆகவே, இவர்களுடைய செயல்பாடை வைத்து பார்க்கும்போது மன அழுத்தத்தில் இருப்பது திமுக கூட்டணி தான். அழுத்தமாக இருப்பது என்றால் அதிமுக பாஜக கூட்டணி தான். இதனை அண்ணன் திருமாவளவன் மறைமுகமாகவே சொல்லிவிட்டார்” எனவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியிருக்கிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025
பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல்…உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம்!
April 23, 2025