ஆசிய கோப்பை 2018:ஹாங்காங் அணிக்கு 286 ரன்கள் வெற்றி இலக்கு …!இறுதியில் சொதப்பிய இந்திய அணி …!
ஹாங்காங் அணிக்கு 286 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி.
ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் தொடர் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் தொடங்கியது.
இன்று இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்கள் அடித்தது.இந்திய அணியில் அதிகபட்சமாக தவான் 127 ,ராயுடு 60 ரன்கள் அடித்தனர்.
ஹாங்காங் அணியின் பந்துவீச்சில் ஷா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதனால் ஹாங்காங் அணிக்கு 286 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி.