கருணாநிதிக்கு அரசு மரியாதை…!அதிமுக அரசு போட்ட பிச்சை…!எந்த உதவியும் அரசிடமிருந்து பெறவில்லை…!திமுக பொருளாளர் துரைமுருகன்

Default Image

கருணாநிதிக்கு ராஜாஜி அரங்கத்தில் இறுதி மரியாதை அனுமதி கிடைக்காமல் போயிருந்தால் நீதிமன்றம் சென்று பெற்றிருப்போம் என்று  திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி கருணாநிதி காலமானார்.பின்னர் ஆகஸ்ட் 8 ஆம் தேதி மெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதன் பின்னர் செயல் தலைவராக இருந்த மு.க ஸ்டாலின் போட்டியின்றி திமுகவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் கருணாநிதி மறைவையொட்டி அரசு விடுமுறை அளிக்கப்படும் என்றும் கருணாநிதியின் மறைவையொட்டி 7 நாட்களுக்கு தமிழக அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அப்போது தெரிவித்தார்.

Image result for kadambur raju

இது தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜு கருத்து தெரிவித்திருந்தார்.அவர் கூறுகையில், கருணாநிதிக்கு அரசு மரியாதை கொடுத்தது அதிமுக அரசு போட்ட பிச்சை. மேல்முறையீடு செய்திருக்கலாம், ஆனால் நாங்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டோம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்திருந்தார்.

Image result for duraimurugan

இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜு கருத்துக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களிடம் எந்த உதவியும் கருணாநிதியின் நல்லடக்கத்தின் போது பெறவில்லை. அவருடைய நல்லடக்கம் நீதிமன்றம் மூலமே பெற்றோம்.மேலும்  கருணாநிதி உடலுக்கு ராணுவ மரியாதை என்பது மத்திய அரசால் கொடுக்கப்பட்டது என்றும் திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்