பெட்ரோல், டீசல் விலை உயர்வு …!கலால் வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும்…!புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

Default Image

பெட்ரோல், டீசல் விலை குறைய அதன் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதனால் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வந்த எண்ணெய் நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதன் விலையை அதிகரித்து வந்தது .

இதனிடையே கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை எட்டியது.லிட்டருக்கு ரூ.80-ஐ தாண்டியுள்ள பெட்ரோல் விலையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஆனால் மத்திய அரசு அளித்த விளக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவாலேயே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது என்று தெரிவித்தது.

இந்நிலையில் இது தொடர்பாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,  மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் பெட்ரோல், டீசல் விலை உயருகிறது. பெட்ரோல், டீசல் விலை குறைய அதன் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்