சின்ன சின்ன டார்கெட்.! CSK சாதனையை தட்டி தூக்கிய பஞ்சாப் கிங்ஸ்!
நேற்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி குறைவான டார்கெட் வைத்து கொல்கத்தா அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சாதனை முறியடிக்கப்பட்டது.

சண்டிகர் : நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்ற ஐபிஎல் 2025-இன் 31-வது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில், முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 15.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் எளிய இலக்கை துரத்தி பிடிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது.
ஆனால், அதனை எளிதாக துரத்திப்பிடிக்க விடவில்லை. துரத்திப்பிடிக்கவும் இல்லை. பஞ்சாப் அணி பந்துவீச்சாளர்கள். குறிப்பாக சாஹலின் பந்துவீச்சு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது. மார்கோ ஜான்சனின் பந்துவீச்சு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது. இதனால் கொல்கத்தா அணி 15.1 ஓவரில் 91 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனை அடுத்து, கொல்கத்தா அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ் அணி, ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைவான இலக்கை (111 ரன்கள்) வெற்றிகரமாக தடுத்து வெற்றி பெற்று சாதனை படைத்தது. இதற்கு முன்னர் 2009-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி பஞ்சாப் கிங்ஸுக்கு (அப்போதைய கிங்ஸ் 11 பஞ்சாப் அணி) எதிராக 116/9 ரன்களை அடித்து அதனை தடுத்து பஞ்சாப் அணியை 92 ரன்களுக்குள் சுருட்டி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்து.
தற்போது சென்னை அணியின் 16 ஆண்டு கால இந்த தடுப்பு (Defence) சாதனையை பஞ்சாப் கிங்ஸ் அணி நேற்றைய போட்டியில் முறியடித்து, குறைவான ரன்களை டார்கெட் வைத்து அதனை தடுத்த முதல் அணியாக பஞ்சாப் உள்ளது. 2வது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது.
2018-ல் நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 118 ரன்கள் எடுத்து, MI-ஐ 87 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
2009-ல் பஞ்சாப் அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 119 ரன்கள் எடுத்து, MI-ஐ 116 ரன்களுக்கு கட்டுப்படுத்தி 3 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
2013-ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக 119 ரன்கள் எடுத்து, புனேவை 108 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.