ஏப்ரல் 17-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்.., முக்கிய ஆலோசன.!
சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், ஏப்.17 மாலை 5 மணிக்கு தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகின்ற ஏப்ரல் 17ம் தேதி அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அமைச்சரவைக் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு உள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநிலத்தின் நிர்வாகம், கொள்கை முடிவுகள், சட்டமுன்வரைவுகள், மற்றும் மக்களின் நலன் தொடர்பான முக்கிய விவகாரங்களை விவாதித்து முடிவெடுக்கப்படும். முந்தைய கூட்டங்களில், நிதிநிலை தயாரிப்பு மற்றும் முதலீடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தற்போதைய கூட்டமும் இதேபோன்ற முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் கொடுப்பது, புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் கொடுப்பது ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.