நயினார் நாகேந்திரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் வாழ்த்து.!
தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு பெற்றதற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து இது குறித்து சில விஷயங்களை பற்றி பேசினார். இதனிடையே, தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் வாழ்த்து தெரிவித்தது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
சட்டப்பேரவையில் மாநில உரிமைகளை மத்திய அரசு பறிப்பதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உரையாற்றினார். அதே சமயம், பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டதற்காக பேரவையிலேயே நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்தார். பதிலுக்கு நயினார் நாகேந்திரனும் நன்றி கூறினார்.
தமிழ்நாட்டில் திமுகவும் பாஜகவும் அரசியல் ரீதியாக எதிரெதிர் துருவங்களில் இருக்கின்றன. திமுக, மாநில உரிமைகள், சமூக நீதி, மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றை வலியுறுத்தும் கட்சியாக உள்ளது. அதேவேளையில் பாஜக தேசியவாதம் மற்றும் இந்துத்துவக் கொள்கைகளை முன்னிறுத்துகிறது. இதனால், சட்டப்பேரவையில்ஸ்டாலினின் வாழ்த்து தெரிவித்தது அரசியல் மாறுபாடுகளுக்கு மத்தியில் ஒரு மரியாதை நிமித்தமான தருணத்தை பிரதிபலிக்கிறது.