தோத்தாலும் போராடிட்ட கண்ணா! ரிஷப் பண்டை பாராட்டிய லக்னோ உரிமையாளர்!
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

லக்னோ : பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும் கோபமடைந்து அணியின் கேப்டனை கடுமையாக திட்டுவதை நாம் பார்த்திருக்கிறோம். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் கடந்த ஆண்டு ஒரு போட்டியில் தோல்வி அடைந்ததற்கு அப்போதைய கேப்டனாக இருந்த கே.எல் ராகுலை கடுமையாக திட்டி கோபத்துடன் பேசிய காட்சிகள் மிகவும் வைரலாகி கொண்டு இருந்தது.
அதற்கு அடுத்தே சீசன் அதாவது இந்த சீசனில் கே.எல்.ராகுலை விடுவித்து ரிஷப் பண்டை ரூ.27 கோடிக்கு எடுத்தது. பண்ட் இந்த சீசன் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் கேப்டன்சி சிறப்பாக செய்தார் என்று சொல்லலாம். இதன் காரணமாக அவரை உரிமையாளர் அதிகமாக திட்டவில்லை. ஒரே ஒரு முறை மட்டும் இந்த ஆண்டு அதாவது கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி தோல்வியை சந்தித்தது மட்டுமின்றி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறியிருந்தார்.
அப்போது தான் கே.எல்.ராகுலை திட்டும்போது எப்படி முகபாவனையை வைத்திருந்தாரோ அதைப்போல தான் வைத்து ரிஷப் பண்டை திட்டினார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது. அதனை தொடர்ந்து லக்னோ அணி தோல்வியை பெரிய அளவில் சந்திக்காமல் இருந்த காரணத்தால் என்னவோ சஞ்சீவ் கோயங்கா பண்டை திட்டாமல் இருந்தார்.
இந்த சூழலில், நேற்று சென்னை அணிக்கு எதிராக லக்னோ விளையாடிய நிலையில், கடைசி வரை போராடி அந்த போட்டியில் லக்னோ தோல்வி அடைந்தது. இந்த தோல்வியால் சஞ்சீவ் கோயங்கா கோபம் அடைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் சந்தோசமாக சிரித்த முகத்துடன் பண்டை கட்டியணைத்து பாராட்டுகளை தெரிவித்தார். அவருடைய பாராட்டு தோற்றாலும் பரவாயில்லை கடைசி வரை போராடி தோல்வி அடைந்திருக்கிறாய் என்பது போல இருந்ததாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். இந்த சீசனில் பார்முக்கு வராமல் இருந்த ரிஷப் பண்ட் அரை சதம் விளாசி பார்முக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.