பாஜகவுடன் கூட்டணி “ரொம்ப வருத்தம்”..! கதறி அழுத அதிமுக நிர்வாகி..!
நிர்பந்தத்தால் பாஜகவுடன் கூட்டணி வைக்கப்பட்டுள்ளது என திருப்பூர் அதிமுக நிர்வாகிகள் வேதனையுடன் பேசியிருக்கிறார்கள்.

சென்னை : மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த போது, தமிழக அரசியலில் முக்கிய நிகழ்வாக 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி வைத்தது. இந்த நிகழ்வில் அமித்ஷா உடன் அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்ததை அடுத்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து பேசி வருகிறார்கள். இந்த சூழலில், அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்கு அதிமுக நிர்வாகி ஒருவர் கண்கலங்கி பேசியுள்ளார். இன்று திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட போது தான் எதிர்க்கட்சி கொறடா கண்ணப்பன் கதறி அழுது பேசியிருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர் “பாஜகவுடன் கூட்டணி வைத்தது என்பது எனக்கு இன்னும் வரை பெரிய வருத்தமான விஷயமாக உள்ளது. நிர்பந்தம் காரணமாக பாஜகவுடன் கூட்டணி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இஸ்லாமியர்கள் யாரும் வருத்தப்படவேண்டாம். ஏனென்றால், அதிமுக இஸ்லாமியர்களுடன் எப்போதும் துணை நிற்கும். இஸ்லாமிய சொந்தங்களை காப்பாற்ற வேண்டும் என்பது எடப்பாடி அவர்களுடைய எண்ணத்தில் எப்போதும் இருக்கிறது” எனவும் கண்ணீர் விட்டபடி கொறடா கண்ணப்பன் பேசினார்.
அவரை தொடர்ந்து பேசிய அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ குணசேகரன் பாஜகவுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக உள்ளது. ஆனால், நம்மளுடைய இயக்கத்தை காப்பாற்றவேண்டும் என்றால் இதனை செய்துதான் ஆகவேண்டும். மற்றபடி, இதற்காக இஸ்லாமியர்கள் வருத்தம் அடைய வேண்டாம், அதிமுக என்றும் உங்களுடன் துணை நிற்கும்” எனவும் பேசினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025