RRvRCB : இதுதான் டார்கெட்! பெங்களூரு வெற்றிக்கு 174 ரன்கள் இலக்கு வைத்த ராஜஸ்தான்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்துள்ளது.

ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற RCB கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். இரு அணிகளும் முந்தைய போட்டியில் தோல்வி அடைந்துள்ளதால் இந்த போட்டியில் வெற்றி பெரும் முனைப்பில் விளையாடி வருகின்றன.
முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 16 ஓவர் வரை களத்தில் நின்று 47 பந்தில் அதிகபட்சமாக 75 ரன்கள் அடித்தார். அதில் 10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கும். கேப்டன் சஞ்சு சாம்சன் 15 ரன்களிலும், ரியான் பராக் 30 ரன்கள் எடுத்தும் அவுட் ஆகி வெளியேறினர்.
ஹெட்மையர் 9 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். துருவ் ஜூரல் சற்று நிலைத்து 23 பந்தில் 35 ரன்கள் அடித்து இறுதி வரை களத்தில் நின்றார் . இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சார்பில் புவனேஷ் குமார், யாஷ் தயாள், ஹேசில்வுட், க்ருனால் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். RCB அணி வெற்றி பெற 20 ஓவர்களில் 174 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் அடுத்து களமிறங்க உள்ளது.