காற்று மாசுபாடு மத்திய சூற்றுசூழல் அமைச்சர் பேச்சு !சர்ஜீக்கள் ஸ்ட்ரைக் நடத்த முடியாது …

Image result for மத்திய  சுற்றுசூழல் அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், காற்று மாசு நிலையை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். காற்று மாசுவிற்கு எதிராக தனிநபரால் சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்ற தாக்குதலை நிகழ்த்த முடியாது என்றார். இந்த விவகாரத்தை பொறுத்த வரை மத்திய அரசால் கொள்கைகளை மட்டுமே வகுத்துக் கொடுக்க முடியும். மாநில அரசு தான் இந்த பிரச்சனையை சமாளிக்க வேண்டும் என கூறியுள்ளார். 

Image result for டெல்லி மாசு

புதுடெல்லியில் காற்று மாசு அதிகரித்து சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி மண்டலத்தில் தொடர்ந்து காற்றின் தரம் மிக மோசமான தர நிலையில் நீடித்து  வருகிறது. கடுமையான பனிப்பொழிவு, டீசல் வாகனங்களின் பெருக்கம், அண்டை  மாநிலங்களில் பயிர்கழிவுகள் எரிக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காற்று மாசடைந்துள்ளது. இந்நிலையில் காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில், மத்திய அரசு இதில் உரிய கவனம் கொள்ளவில்லை என கெஜ்ரிவால் அரசு குற்றம்சாட்டியுள்ளது. காற்றுமாசு பிரச்னையை தீர்க்க உடனடியாக டெல்லி, அரியானா மற்றும்  பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் முதல்வர்களை பிரதமர் மோடி அழைத்து ஆலோசனை நடத்த  வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. 

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment