பொன்முடியின் அமைச்சர் பதவி பறிக்கப்படுமா? மு.க.ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனை!
அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சின் எதிரொலியாக அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டதை அடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

சென்னை : திமுக அமைச்சர் பொன்முடி அண்மையில் ஒரு நிகழ்வில் பேசுகையில், இரு சமயத்தாரை குறிப்பிட்டு உடலுறவு குறித்து மறைமுகமாக மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இந்த பேச்சுக்கு திமுக கட்சிக்கு உள்ளேயும், கூட்டணி கட்சியினர் மத்தியிலும், மற்ற கட்சியினர் மத்தியிலும் கடும் எதிர்ப்புகள் எழுந்தது.
இந்த சர்ச்சைகளை அடுத்து, அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவி பறிக்கப்பட்டது. பொன்முடி, திமுகவின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்தார். அப்பதவியில் இருந்து அவரை நீக்கி கட்சி தலைவரும் , முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அவருக்கு பதிலாக திமுக மாநிலங்களவை எம்பி திருச்சி சிவா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து தற்போது திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக மூத்த நிர்வாகிகள் உடன் ஆலோசனை செய்து வருகிறார். இந்த சயமத்தில் திமுக அமைச்சர் பொன்முடி தனது வீட்டில் இருந்து அறிவாலயம் புறப்பட்டு சென்றுள்ளார்.
இதனால், சர்ச்சை பேச்சின் எதிரொலியாக திமுகவில் பொன்முடிக்கு கட்சிபதவி பறிக்கப்பட்டது போல, அமைச்சர் பதவியும் பறிக்கப்படாமல் என உறுதிப்படுத்தப்படாத சில தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரவி வருகிறது. ஏற்கனவே, சொத்துகுவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தீர்ப்பு வந்த சமயம் அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு பிறகு உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து இலாகா மாற்றி மீண்டும் அமைச்சரானார் என்பது குறிப்பிடத்தக்கது.