”டாக்சிக் மக்களே… இது தான் பெயரில்லா கோழைத்தனம்” – த்ரிஷாவின் காட்டமான பதிவு.!
குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, சமூக ஊடங்கங்களில் 'Hate' பரப்பும் நபர்கள் மீது நடிகை திரிஷா காட்டமாக பதிவிட்டுள்ளார்.

சென்னை : அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை த்ரிஷா, இப்படம் குறித்த சமூக ஊடக விமர்சனங்கள் குறித்து தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு காட்டமான பதிவை வெளியிட்டுள்ளார்.
அஜித்துடன் த்ரிஷா நடிக்கும் ஆறாவது படமாக குட் பேட் அக்லி உள்ளது. இருவரும் முன்பு ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால், மற்றும் விடாமுயர்ச்சி போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளனர். தற்பொழுது, குட் பேட் அக்லி படத்தில் நடித்திருக்கும் தனது கதாபாத்திரம் குறித்து தொடர்ந்து நெட்டிசன்களிடம் இருந்து வரும் எதிர்மறையான கருத்துக்களால் நடிகை கோபமடைந்துள்ளார் என்று தெரிகிறது.
அவர் தனது பதிவில், “சமூக ஊடகங்களில் உட்கார்ந்து கொண்டு மற்றவர்களைப் பற்றிய முட்டாள்தனமான விஷயங்களைப் பதிவிடும் Toxic மக்களே, நீங்கள் எப்படி வாழ்க்கையை நடத்துகிறீர்கள்? எப்படி உங்களால் தூங்க முடிகிறது? இதற்கு தான் பெயர் தெரியாத கோழைத்தனம். கடவுள் உங்கள் அனைவரையும் உண்மையிலேயே ஆசீர்வதிப்பாராக” என்று குறிப்பிட்டுள்ளார்.
A strong reaction from #Trisha to the organized negative posts against her for #GoodBadUgly. 👍
Call it what it is: Jealousy. She’s a numero uno actress, and some can’t handle it! @trishtrashers pic.twitter.com/W5MDUp8GKe
— George 🍿🎥 (@georgeviews) April 11, 2025
குட் பேட் அக்லி
குட் பேட் அக்லி படத்தில் அர்ஜுன் தாஸ், பிரசன்னா, கார்த்திகேயா தேவ், பிரபு, பிரியா பிரகாஷ் வாரியர், சுனில், ராகுல் தேவ், ரெடின் கிங்ஸ்லி மற்றும் ரகு ராம் மற்றும் பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க,இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது.