டொமினிகன் இரவு விடுதியின் மேற்கூரை விபத்து.., அதிகரிக்கும் எண்ணிக்கை.!
டொமினிகன் நாட்டில் இரவுநேர கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில்சிக்கி பலியானோர் எண்ணிக்கை 184 ஆக உயர்ந்துள்ளது.

டொமினிகன் : இசை நிகழ்ச்சிக்காக ஒன்றுகூடி ஜாலியாக, வைப் செய்து கொண்டிருந்தவர்களின் ஆனந்தக்குரல், ஒரே நொடியில் அழுகுரலாக மாறிவிட்டது. ஆம், கூரை இடிந்து விழுந்ததில், இதுவரை 184 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். டொமினிக்கன் ரிபப்ளிக் நாட்டில் நிகழ்ந்துள்ள இந்த கோர விபத்தில் சிக்கி பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சூழலில், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது.
இந்த இரவு விடுதியில் இசைக்கலைஞர்கள், அரசியல்வாதிகள், தொழில்முறை விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்பொழுது, திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தபோது நடனம் மற்றும் இசையில் உற்சாகம் செய்து கொண்டிருந்த நூற்றுக்கணக்கான விருந்தினர்கள் மீது டன் கணக்கில் கான்கிரீட் இடிந்து விழுந்தது.
இந்த விபத்துக்கு பின், பல மணிநேரமாக இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இரவு விடுதியின் கூரை இடிந்து விழுந்ததற்கான காரணங்கள் உடனடியாகத் தெரியவில்லை என்றாலும், இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025