“அஜித் குமாரை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.,” ரஜினிகாந்த் பேட்டி!
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீசானதை ஒட்டி ரஜினியிடம் கேள்வி எழுப்பியபோது, அஜித் குமாரை கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என பேசியுள்ளார்.

சென்னை : அஜித்குமார் நடிப்பில் இன்று குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த திரைப்படம் அஜித் ரசிகர்களை கொண்டாட வைக்கும் அளவுக்கு நன்றாக இருப்பதாக படத்தின் மீதான விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில், இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜெயிலர் 2 படப்பிடிப்பிற்காக சென்ற நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்தார். அப்போது அவரிடம் இன்று அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி உள்ளது அதுபற்றி கூறுங்கள் என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த், “படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள். God Bless U ” என குட் பேட் அக்லி ஸ்டைலில் தனது வாழ்த்து செய்தியை பதிவிட்டு சென்றார்.
மேலும், குமரி அனந்தன் மறைவு குறித்த கேள்விக்கு , தூய்மையான அரசியல்வாதி, நல்ல மனிதர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். என தெரிவித்தார்.
மேலும், தனது கூலி பட ஷூட்டிங் நிறைவு பெற்றுவிட்டது. படம் நன்றாக வந்துள்ளது. படம் ஆகஸ்டில் ரிலீசாக உள்ளது. தற்போது ஜெயிலர் 2 பட வேலைகள் ஆரம்பித்துள்ளோம். இது எப்போது முடியும் என தெரியாது என ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.