அன்னா கிராம்லிங்க்கு செக்! கண்ணை மூடி கொண்டு வீழ்த்தி அசத்திய மேக்னஸ் கார்ல்சன்!
ஃப்ரீஸ்டைல் செஸ் போட்டி கண்காட்சியில் அன்னா க்ராம்லிங்கிற்கு எதிராக கண்ணைமூடி கொண்டு விளையாடி அவரை மேக்னஸ் கார்ல்சன் வீழ்த்தியுள்ளார்.

ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல் செஸ் கண்காட்சி போட்டி (Blindfold Freestyle Chess Exhibition) போட்டியில் தற்போது விளையாடி வருகிறார். இந்த போட்டியில் அசத்தலாக விளையாடி அவருக்கு எதிராக விளையாடிய அன்னா க்ராம்லிங்கை திறமையாக விளையாடி வீழ்த்தவும் செய்திருக்கிறார்.
பிளைண்ட்ஃபோல்டு போட்டி என்றால், வீரர்கள் செஸ் பலகையை பார்க்காமல், மனதில் நினைவு வைத்து விளையாடுவது. இது நார்மலாக விளையாடும் போட்டிகளை விட கொஞ்சம் சவாலாக தான் இருக்கும். இந்த போட்டியின் இறுதிப்போட்டியில் தான் கார்ல்சன் அன்னாவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் அவர் தனது ரூக் (தேர்) மற்றும் நைட் (குதிரை) காய்களைப் பயன்படுத்தி, பலகையை பார்க்காமல் (பிளைண்ட்ஃபோல்டு) அன்னாவை மேட் (checkmate) செய்து வெற்றி பெற்றார்.
இது ஒரு சாதாரண ஆட்டம் இல்லை, ஏனெனில் பிளைண்ட்ஃபோல்டு முறையில் விளையாடுவது மிகவும் கடினம். கார்ல்சனின் இந்த வெற்றி அவரது அசாதாரண திறமையை காட்டியது. அவர் அசத்தலாக விளையாடி வெற்றிபெற்ற வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து அவருக்கு வாழ்த்துக்களும் குவிந்துகொண்டு இருக்கிறது.
மேலும், பொதுவாகவே பிளைண்ட்ஃபோல்டு ஆட்டங்களில், வீரர்கள் பொதுவாக நகர்வுகளை வாய்மொழியாக அறிவிப்பார்கள் உதாரணமாக (எ.கா., “நைட் E4 க்கு F6”), மற்றவர் அதை பலகையில் நகர்த்துவார். ஆனால், அன்னா பலகையை பார்த்து விளையாடியிருக்கலாம், அதேசமயம் கார்ல்சன் முழுக்க முழுக்க மனதளவில் கணக்கிட்டு இந்த போட்டியில் வென்றார் என்பது தான் பெரிய விஷயம்.