கொல்கத்தாவுக்கு பயத்தை காட்டிய பூரன்! லக்னோ வைத்த பெரிய இலக்கு!

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி அதிரடியாக விளையாடி 238 ரன்கள் குவித்துள்ளது.

Kolkata Knight Riders vs Lucknow Super Giants

கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது. முதலில் இந்த போட்டி ஏப்ரல் 6 (ஞாயிற்று கிழமை) நடைபெற இருந்தது. அன்றைய தினம் ராம நவமி என்பதால் கொல்கத்தாவில் அன்றைய தினம் நடத்தப்படாமல் போட்டி இன்றைக்கு மாற்றப்பட்டது.

அதன்படி, போட்டியில் முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய லக்னோ ஆரம்பமே அதிரடியாக விளையாடியது என்று சொல்லலாம். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஐடன் மார்க்ராம், மிட்செல் மார்ஷ் இருவரும் பவர்பிளே ஓவர்களிலேயே கொல்கத்தா அணியின் பந்துவீச்சை பறக்கவிட்டனர் என்று சொல்லலாம். எய்டன் மார்க்ரம் 47, மிட்செல் மார்ஷ் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில்,  அடுத்ததாக பூரன் களமிறங்கினார்.

அவரும் தன்னுடைய வழக்கமான பாணியில் அதிரடியாக விளையாடிய காரணத்தால் 18 ஓவர்களுக்கு முன்னதாகவே 200 ரன்களை கடந்துவிட்டது. இருப்பினும், நிக்கோலஸ் பூரன் அதிரடி (87*) ஆட்டம் காரணமாக லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்  இழப்பிற்கு 238 ரன்கள் குவித்தது. இதனையடுத்து, 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியுள்ளது.

கொல்கத்தா அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் ஹர்ஷித் ராணா சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். அதைப்போல, லக்னோ அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் (87*) , மிட்செல் மார்ஷ் 81  ரன்கள் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் :

அஜிங்க்யா ரஹானே தலைமையில் குயின்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ரின்கு சிங், ஆண்ட்ரே ரசல், ராமன்தீப் சிங், வைபவ் அரோரா, ஸ்பென்சர் ஜான்சன், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் விளையாடுகின்றனர்.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் :

ரிஷப் பண்ட் தலைமையில் மிட்செல் மார்ஷ், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாக்கூர், ஆகாஷ் தீப், அவேஷ் கான், திக்வேஷ் சிங் ரதி ஆகியோர் விளையாடுகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்