சிலிண்டர் விலை உயர்வு அமலுக்கு வந்தது.., இனி எவ்வளவு தெரியுமா? மத்திய அரசு அதிரடி…

சென்னையில் 14.2 கிலோ வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் ரூ.818.50-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், ரூ.50 உயர்ந்து ரூ.868.50-க்கு விற்பனையாகிறது.

LPG Price Hike

சென்னை : வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ரூ.818.50 ஆக இருந்த சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.868.50-க்கு விற்கப்படுகிறது.

கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது விலை உயர்வு அமலாகியுள்ளது.

இந்த விலை உயர்வு பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வை கண்டித்து தமிழக அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

உயர்வுக்கு காரணம் என்ன?

சமையல் எரிவாயு விலை பெரும்பாலும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்து மாறுபடும். கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், அதை இறக்குமதி செய்யும் செலவு அதிகரிக்கும். இதனால் எரிவாயு உற்பத்தி செலவும் உயர்கிறது. மேலும், அரசின் பொருளாதாரக் கொள்கைகள், வரி மாற்றங்கள் ஆகியவையும் விலை உயர்வுக்கு காரணமாக இருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்