கலால் வரி மட்டும் தான் உயர்வு…”பெட்ரோல் & டீசல் ரேட் உயராது”..மத்திய அரசு விளக்கம்!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.2 உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

petrol diesel modi

டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக மாறியிருக்கிறது. மத்திய அரசு கொடுத்துள்ள இந்த அறிவிப்பின்படி, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் மீதான கலால் வரி ஒவ்வொரு லிட்டருக்கு 2 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கலால் வரி என்பது எரிபொருள் விலையில் சேர்க்கப்படும் ஒரு முக்கிய அம்சம் என்பதால், கலால் வரி உயர்த்தப்பட்டதால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படலாம் என வாகன ஓட்டிகள் அச்சத்தில் இருந்தனர். மக்களும் அதிர்ச்சியுடன் சமூக வலைதள பக்கங்களில் விலை உயருமா என கேள்விகளை எழுப்ப தொடங்கிவிட்டார்கள்.

மத்திய அரசு விளக்கம் 

சமூக வலைத்தளங்களில் மக்கள் பலரும் அதிர்ச்சியுடன் கேள்விகளை எழுப்ப தொடங்கியவுடன் மத்திய அரசு அதற்கு விளக்கமும் அளித்துள்ளது. மத்திய அரசு இன்று பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு தலா 2 ரூபாய் உயர்த்தியிருந்தாலும், பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (PSU Oil Marketing Companies) பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விலைகளில் எந்த உயர்வும் இருக்காது ” என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய அரசு கலால் வரியை உயர்த்தி அறிவித்துள்ள நிலையில், எந்த தேதி முதல் வரி விதிக்கப்படும் என்கிற அறிவிப்பு வரவில்லை. விரைவில் அறிவிப்பு வெளியானவுடன் வரிகள் விதிக்கப்படும் என கூறப்படுகிறது. அதே சமயம் இந்த வரி உயர்வு தமிழ்நாடு உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பொருந்தும், ஏனெனில் கலால் வரி மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் வருகிறது. எனவே, நாடு முழுவதும் உள்ள மக்கள் இந்த மாற்றத்தை உணர்வார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்