‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!
குட் பேட் அக்லி படத்திற்காக நெல்லையில் அஜித்திற்கு ரெடியாகி கொண்டிருந்த 200 அடி கட் அவுட் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

நெல்லை : ‘குட் பேட் அக்லி’ படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், ரசிகர்கள் செய்யும் செயல்கள் சில நேரங்களில், அவர்களது ஆஸ்தான நாயகர்களுக்கே வேதனையை கொடுக்கும். நெல்லையில் நடிகர் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ பட வெளியீட்டைக் கொண்டாடுவதற்காக அவரது ரசிகர்கள் 200 அடி உயரத்தில் ஒரு பிரம்மாண்டமான கட்-அவுட் அமைக்க முயற்சித்தனர்.
இந்த கட்-அவுட் நெல்லை PSS மல்டிபிளக்ஸ் திரையரங்கு வளாகத்தில் நிறுவப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால், நேற்று மாலை சுமார் 6 மணியளவில், கட்-அவுட்டின் பாரம் தாங்க முடியாமல் அது திடீரென சரிந்து கீழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக ரசிகர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இது போன்ற பிரம்மாண்ட கட்-அவுட்கள் அமைப்பது தமிழ்நாட்டில் ரசிகர்களிடையே ஒரு வழக்கமான கொண்டாட்டமாக இருந்து வருகிறது. எனினும், உயரமான கட்அவுட் வைக்க அரசு தடை விதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்பொழுது, இந்த விபத்து குறித்து காணொளியை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
திருநெல்வேலி PSS மல்டிபிளக்ஸ் தியேட்டரில் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி படத்திற்கு வைக்கப்பட்டிருந்த கட்-அவுட் சாரம் சரிந்து விழுந்தது..!
எதுக்குடா இந்த வீணாப்போன வேலைய செய்றீங்க.. 🤦🏼♂️#GoodBadUgly#Ajithkumar𓃵 pic.twitter.com/vmlua5LBWO— 🔥என்றும்தமிழன்🔥 (@tamilan_mj) April 6, 2025