வரிக்கு பதிலடி கொடுத்த சீனா “அவுங்க பயந்துட்டாங்க” டொனால்ட் டிரம்ப் பேச்சு!

டொனால்ட் டிரம்ப் சீனா தங்களை பார்த்து பயந்துவிட்டதாக வாஷிங்டனில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் வெளிப்படையாகவே பேசியுள்ளார்.

Donald Trump china

வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி உயர்வுக்கு பதிலடி கொடுத்தது. இதற்கு பதிலளித்த ட்ரம்ப், தனது Truth Social தளத்தில், “சீனா தவறாக விளையாடியது, அவர்கள் பதற்றமடைந்துவிட்டனர் என கூறியுள்ளார்.

இரண்டு நாடுகளும் மாறி மாறி இந்த சுங்கவரி விதித்த காரணத்தால் இது உலக பங்குச் சந்தைகளை பெரிதும் பாதித்தது. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் அமெரிக்காவின் முக்கிய பங்குச் சந்தை குறியீடுகளான S&P 500 ஆனது 6% சரிந்து, Dow Jones Industrial Average 2,200 புள்ளிகள் (5.5%) குறைந்து, Nasdaq 5.8% சரிவை சந்தித்தது. இதற்கு டொனால்ட் டிரம்ப் அப்செட்டில் இருப்பார் என்று நினைத்தால் அது தான் இல்லை இதற்கும் அசால்ட்டாக பேசியிருக்கிறார்.

ட்ரம்ப் இந்த சந்தை சரிவை பற்றி கவலைப்படவில்லை என்று கூறி, “சந்தைகள் பிரியும், பங்குகள் பிரியும் , நாடு பிரியும்,” என்று வாஷிங்டனில் நிருபர்களிடம் தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர் ” சீனா தவறாக விளையாடியது, அவர்கள் பதற்றமடைந்துவிட்டனர் – அவர்களால் தாங்க முடியாத ஒரே விஷயம் இது! நான் சொன்னது போலவே, அவர்கள் பலவீனமாக உள்ளனர், இப்போது அது தெளிவாகிறது. அமெரிக்கா மீண்டும் வலிமையாக உள்ளது, நாம் வெல்வோம்!

பங்குகள் சரிவது என்பது ஒரு மருத்துவ அறுவை சிகிச்சை போன்றது – சிறிது வலி இருக்கலாம், ஆனால் நீண்ட காலத்தில் பெரிய நன்மைகள் கிடைக்கும். சீனா பல ஆண்டுகளாக நம்மை ஏமாற்றி வந்தது, இப்போது அவர்கள் பதற்றமடைந்துள்ளனர். என் சுங்கவரிகள் அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளை மீட்டெடுக்கும், உற்பத்தியை அதிகரிக்கும். இதில் எந்த மாற்றமும் இருக்காது” எனவும் டொனால்ட் டிரம்ப்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்