குட் பேட் அக்லி ‘சம்பவம்’.! AK வரார் வழிவிடு.., வெறித்தனமான ட்ரைலர் இதோ…
அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. புஷ்பா படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
இப்படத்தில் திரிஷா, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, அர்ஜுன் தாஸ், பிரபு, சுனில் என பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் இருந்து 2 பாடல்கள் , டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது
டீசரை போலவே டிரைலரும் அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி ஒவ்வொரு காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. மார்க் ஆண்டனி படத்தில் பஞ்சுமிட்டாய் பாடலை ரீமேக் செய்தது போல, இந்த படத்தில் “ஒத்த ரூபா தாரேன்.., ” பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளார் இயக்குனர் ஆதிக். ‘இருங்க பாய்,’ ‘AK வரார் வழிவிடு’ , ‘உடம்பில் உயிர் இருக்காது’ என வசனங்கள் ரசிகர்களை ஈர்த்துள்ளது.
ட்ரைலர் போலவே படமும் அஜித் ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக அமைந்துவிட்டால் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டாகும் என்றே கூறப்படுகிறது.