LSG vs MI : டாஸ் வென்ற மும்பை! பிளேயிங் 11-ல் ரோஹித் இருக்கிறாரா? பேட்டிங் தயாராகும் லக்னோ!
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி பேட்டிங் களமிறங்க உள்ளது.

லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய நாள் ஆட்டம் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இரண்டு அணிகளுமே 3 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளன என்பதால் 2 அணிகளும் 2வது வெற்றி பெற இன்றைய ஆட்டத்தில் தங்கள் முழு முயற்சியையும் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி பேட்டிங் களமிறங்க உள்ளது.
லக்னோ அணி கேப்டன் மற்றும் மும்பை அணி நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா ஆகிய இருவருமே தங்கள் முந்தைய போட்டிகளில் மிகவும் சொற்ப ரன்களில் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தனர். இன்றைய போட்டிகளில் இரு வீரர்களுமே பேட்டிங்கில் தங்கள் திறனை வெளிக்காட்ட வேண்டும் என பலரும் எதிர்நோக்கி காத்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஓர் ஷாக்கிங் செய்தி வெளியாகியுள்ளது.
பிளேயிங் 11-ல் ரோஹித் சர்மா?
மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியுடனான கடந்த போட்டியில் ரோஹித் சர்மாவை பிளேயிங் 11-ல் சேர்க்காமல் இம்பேக்ட் வீரராக பேட்டிங் மட்டும் செய்ய அனுமதித்தது பேசுபொருளாக மாறியது. கடந்த போட்டியில் அவர் பீல்டிங் செய்யவில்லை. அதே போல இந்த போட்டியிலும் பிளேயிங் 11-ல் ரோஹித் சர்மா பெயர் இடம்பெறவில்லை.
ஆனால் கடந்த போட்டியில் அவர் இம்பேக்ட் பிளேயராக களமிறக்கப்பட்டார். இந்த முறை இம்பேக்ட் வீரர்கள் பெயர் லிஸ்டில் கூட ரோஹித் பெயர் இல்லை. திலக் வர்மா, கார்பின் போஷ், ராபின் மின்ஸ், சத்யநாராயண ராஜு, கர்ண் ஷர்மா ஆகியோர் பெயர்கள் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் இம்பேக்ட் பிளேயர் லிஸ்டில் உள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் :
ரிஷப் பண்ட் தலைமையில் ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், , ஆயுஷ் படோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாக்கூர், திக்வேஷ் சிங் ரதி, ஆகாஷ் தீப், அவேஷ் கான் ஆகியோர் களமிறங்க உள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் :
ஹர்திக் பாண்டியா தலைமையில் வில் ஜாக்ஸ், ரியான் ரிக்கல்டன்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், நமன் திர், ராஜ் பாவா, மிட்செல் சான்ட்னர், டிரென்ட் போல்ட், அஷ்வனி குமார், தீபக் சாஹர், விக்னேஷ் புதூர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.