எப்படிப்பா ஆடுற? ஒன்னும் புரியல! அபிஷேக் சர்மாவை விமர்சித்த ஆகாஷ் சோப்ரா!
அபிஷேக் சர்மா பார்மில் இல்லை என கூறி முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா சில அறிவுரைகளையும் வழங்கியுள்ளார்.

கொல்கத்தா : அதிரடி அணிக்கு என்ன ஆச்சுபா என்பது போல சமூக வலைத்தளங்களில் ஹைதராபாத் அணியை பார்த்து தான் பலரும் கேள்விகளை எழுப்பி கொண்டு வருகிறார்கள். அதற்கு காரணமே ஹைதராபாத் அணியில் வீரர்கள் பார்மில் இல்லாததும் தொடர்ச்சியாக ஹாட்ரிக் தோல்வியை சந்தித்து புள்ளி விவர பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதன் காரணமாக அணி குறித்தும் அணியில் இருக்கும் வீரர்கள் பேட்டிங் குறித்தும் விமர்சனங்கள் எழுந்திருக்கிறது.
அதிலும் உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா பேட்டிங் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. இந்த ஆண்டு முதல்போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் 24 ரன்கள் எடுத்து டீசண்டாக விளையாடினார். அதற்கு அடுத்ததாக லக்னோ அணிக்கு எதிர்கா 6, டெல்லிக்கு எதிராக 1, கொல்கத்தாவுக்கு எதிராக 2 என குறைவான ரன்கள் எடுத்து விக்கெட் இழந்து வெளியேறினார்.
எனவே, அவர் அதிரடியான அந்த பாணியை மாற்றி கொஞ்சம் களத்தில் நின்று விளையாடவேண்டும் என்று தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் அவருக்கு அறிவுரைகளை வழங்கி வருகிறார்கள். அப்படி தான் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் வீடியோ வெளியீட்டு அபிஷேக் சர்மா பேட்டிங் குறித்து விமர்சனம் செய்தது மட்டுமின்றி ஹைதராபாத் அணிக்கு அட்வைஸ் ஒன்றையும் வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில் ” அபிஷேக் சர்மா விளையாடும் விதம் எப்படி விளையாடுகிறார் என்று எனக்கு உண்மையில் புரியவில்லை. அவர் பார்மில் இல்லை என்பது தெரிகிறது. ஒரு வீரர் என்றால் இதெல்லாம் நடப்பது இருக்கும். ஆனால், பார்மில் இல்லை என்றால் கூட ஒரு வீரர் எந்த மாதிரியான நோக்கில் விளையாடுவார் என்பதை புரிந்துகொள்ளமுடியும். அபிஷேக் சர்மா எப்படி தான் விளையாடுகிறார் என்றே எனக்கு தெரியவில்லை.
அவர் பேட்டிங் செய்யும்போதே அவர் தடுமாறுவதாக நான் நினைக்கிறேன். கடந்த சீசனில் வேறு மாதிரி விளையாடினார் இப்போது வேறு மாதிரி விளையாடுகிறார். அவரும் ரன்கள் எடுக்காமல் இருக்க ஆட்டமும் போய்க்கொண்டே இருக்கிறது. ஒரு முக்கியமான கட்டத்தில் இருந்துகொண்டு சரியாக நீங்கள் விளையாடவில்லை என்றால் உங்கள் மீது விமர்சனங்கள் நிச்சயமாக வரும். உங்கள் பேட்டிங் குறித்த கேள்விகளும் எழும்பும்.
அதிலிருந்து பழைய படி பழைய நிலைமைக்கு திரும்பி ஆடவேண்டும் என்றால் உங்களால் தான் முடியும் அதிரடி வொர்க்அவுட் ஆகவில்லை என்றால் களத்தில் சிறுது நேரம் நின்று விளையாட முயற்சி செய்யுங்கள்” எனவும் ஆகாஷ் சோப்ரா அட்வைஸ் கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து பேசுகையில் ” ஹைதராபாத் அணி அதிரடியாக தான் விளையாடப்போகிறோம் என்கிற ஒரு முடிவில் இருக்கிறார்கள்.
அது அவர்களுடைய முடிவு அதனை நான் எதுவும் சொல்லவில்லை…ஆனால், இப்படியே விளையாடி கொண்டு இருந்தால் தோல்விகளும் வருகிறது. தோல்விகள் வந்தால் புள்ளி விவரப்பட்டியலில் கீழே சென்றுவிடுவீர்கள். அதனையும் கொஞ்சம் கவனத்தில் எடுத்துக்கொண்டு விளையாடவேண்டும்” எனவும் அதிரடி பாணியை மாற்றவேண்டும் எனவும் ஆகாஷ் சோப்ரா சூசகமாக பேசி அறிவுரை வழங்கியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு..!
April 7, 2025