ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1280 குறைந்த தங்கம் விலை.! சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?
24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில், கிராம் ரூ.9,163-க்கும், ஒரு சவரன் ரூ.73,304-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை : தங்கம் விலை இன்று (ஏப்.4) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்துள்ளது. கடந்த சில தினங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் திடீரென சரிவைக் கண்டுள்ளது.
இது, நகை வாங்க நினைத்தவர்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது. உலக நாடுகள் மீதான USA வரி விதிப்பால் அந்நாட்டின் பங்குச்சந்தை கடும் சரிவை கண்டுள்ளது கவனிக்கத்தக்கது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.160 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,400க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ஒரு சவரன் ரூ.67,200-க்கு விற்பனையாகிறது.
அதேபோல், சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.4 குறைந்து கிராமுக்கு ரூ.108-க்கும், கிலோ வெள்ளி ரூ.1,08,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில், கிராம் ரூ.9,163-க்கும், ஒரு சவரன் ரூ.73,304-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.