LSG vs PBKS : லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு!
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டி லக்னோவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்க உள்ளது. இரு அணிகளும் இந்த சீசனில் தலா 1 வெற்றி பெற்றுள்ளதால் 2வது வெற்றி பெறும் முனைப்பில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் இதுவரை 2 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது. டெல்லி உடனான ஆட்டத்தில் இறுதி கட்டத்தில் வெற்றியை தவறவிட்டது. அடுத்து பலம் வாய்ந்த ஹைதிராபாத் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. பஞ்சாப் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் விளையாடி வெற்றி பெற்றது.
இந்நிலையில், இன்று டாஸ் ஜெயித்த பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி பேட்டிங் செய்ய உள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் :
ரிஷப் பண்ட் தலைமையில் மிட்செல் மார்ஷ், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், , ஆயுஷ் படோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், திக்வேஷ் சிங் ரதி, ஷர்துல் தாக்கூர், அவேஷ் கான், ரவி பிஷ்னோய் ஆகியோர் களமிறங்க உள்ளனர்.
பஞ்சாப் கிங்ஸ் :
ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங்(விக்கெட் கீப்பர்), ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், கிளென் மேக்ஸ்வெல், சூர்யன்ஷ் ஷெட்ஜ், மார்கோ ஜான்சன், லாக்கி பெர்குசன், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் களமிறங்க உள்ளனர்.
லக்னோ மைதானமானது பொதுவாக பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால், இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட் செய்யும் அணி 160-180 ரன்களை இலக்காக வைக்கலாம் என கூறப்படுகிறது.