இரண்டாவது இடத்திற்கு தான் விஜய்க்கு இபிஎஸ்க்கும் சண்டை! திருமாவளவன் பேச்சு!

விசிகவின் நிலைப்பாடு விஜய், எடப்பாடியை தடுமாற வைத்துள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

thirumavalavan about tvk admk

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டதில் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. கூட்டத்தில் பேசியிருந்த விஜய் ” TVK (தமிழக வெற்றிக் கழகம்) இன்னொன்று DMK (திராவிட முன்னேற்றக் கழகம்) இந்த இரண்டு கட்சிக்கும் தான் போட்டி . திமுகவை 2026-ஆம் ஆண்டு தேர்தலில் வீழ்த்துவோம்” எனவும் பேசியிருந்தார்.

இந்த சூழலில், விஜய் பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியிருக்கிறார். திருவண்ணாமலை மாவட்டத்தில் விசிக தேர்தல் அங்கீகார வெற்றி நேற்று நடைபெற்றதில். அதில் கலந்து கொண்ட அக்கட்சி தலைவர் திருமாவளவன்  இது குறித்து பேசியதாவது” முதல் பொதுக்குழுவில் விஜய் பேசுகிறார். 2026-ஆம் ஆண்டு தேர்தலில் த.வெ.க மற்றும் திமுக இடையில் தான் போட்டி என்று. அவர் பேசியதை வைத்து பார்க்கையில் அவர் சொல்லவருவது என்னவென்றால், போட்டி முதல் இடத்திற்கு இல்லை ஏற்கனவே, இரண்டாவது இடத்தில் இருக்கும் அதிமுகவுக்கும், அவருக்கும் தான்.

இரண்டாவது இடத்தில் இருக்கும் அதிமுகவை விட நாங்கள் தான் சக்தி வாய்ந்தவர்கள் என விஜய் அவர்களுக்கு சவால் விடுகிறார். அவர் பேசியதை வைத்து பார்க்கும்போது எனக்கு அது தான் தோணுகிறது” எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து அவர் பேசுகையில் ” எதோ கருத்து கணிப்பு வைத்தார்களாம் அதில் இவர் இரண்டாவது இடத்திற்கு வந்துவிட்டாராம் அடுத்ததாக ஆட்ச்சியை பிடிக்கப்போகிறாராம்.

இப்படி பேசி விஜயை உசுப்பேத்திவிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அவருக்கு ஆசையை உசுப்பேத்திவிட்டு வாங்க வந்து களத்திற்குள் விளையாடுங்க என்று உசுப்பேத்திவிடுகிறார்கள். விசிக திமுக கூட்டணியில் இருக்கிறது இருக்கிறது என்று சொல்கிறார்கள். அப்படி சொல்பவர்கள் சொல்வது என்னவென்றால் உண்மை தான். ஆனால், ஒரு விஷயத்தை மறந்துவிட கூடாது விசிகவும் சேர்ந்து உருவாக்கிய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருக்கிறோம்” எனவும் ஆவேசத்துடன் திருமாவளவன் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்