பிளேஆஃப் போக வேண்டாமா? ஒழுங்கா விளையாடுங்க..ரோஹித்திற்கு அட்வைஸ் கொடுத்த 2 ஜாம்பவான்கள்!

ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடினாள் தான் மும்பை அணி பிளேஆஃப் செல்ல வாய்ப்புகள் அமையும் என மைக்கேல் வாகன் மற்றும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளனர்.

rohit sharma mi

மும்பை : ஐபிஎல் தொடரில் 5 முறை கோப்பையை வென்ற மும்பை அணிக்கு இந்த நிலைமையா? என ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு இந்த ஆண்டு விளையாடிய 2 போட்டிகளிலும் மும்பை தோல்வியை தழுவி புள்ளி விவர பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. அதைப்போல, அணியில் முக்கிய வீரராக இருக்கும் ரோஹித் ஷர்மாவின் பார்மும் சற்று மோசமாக தான் இருந்து வருகிறது. ஏனென்றால், முதல் போட்டியில் 0 ரன்களிலும், அடுத்த போட்டியில் 8 ரன்கள் என ஆட்டமிழந்து கம்பேக் கொடுக்கவேண்டிய சூழலில் அவரும் அணியும் இருக்கிறது.

எனவே, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடி அணியை மீட்டெடுக்க வேண்டும் என தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் மைக்கேல் வாகன் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இருவரும் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசும்போது ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடினாள் தான் மும்பை அணி பிளேஆஃப் செல்ல வாய்ப்புகள் அமையும் என கருத்து தெரிவித்ததோடு சில அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.

இது குறித்து மைக்கேல் வாகன் பேசுகையில் ” ரோஹித் சர்மா இனிமேல் மும்பை அணிக்காக விளையாடுவது போல விளையாடாமல் நீல ஜெர்சி அணிந்து கொண்டு இந்தியாவுக்காக விளையாடுவது போல விளையாடவேண்டும். அவர் எப்போதும் ஒரு சிறந்த வீரர் என்பது சொல்லித்தான் தெரியவேண்டும் என்று இல்லை. ஆனால், மும்பை அணி இந்த ஆண்டு வெற்றிபெறவேண்டும் என்றால் பழையபடி ரோஹித் சர்மா பார்முக்கு வரவேண்டும். ஏனென்றால், ஒவ்வொரு அணிக்கும் தொடக்க ஆட்டக்காரர்கள் கொடுக்கக்கூடிய ரன்கள் தான் அடித்தளமாக இருக்கும்.

மும்பை அணியில் அது இந்த இரண்டு போட்டிகளில் கிடைக்கவில்லை என்பது தான் தோல்விக்கு காரணமாக பார்க்கிறேன். எனவே, ரோஹித் வரும் போட்டிகளில் வலுவான தொடக்கத்தை கொடுத்துவிட்டு சென்றார் என்றால் நிச்சயமாக மும்பையை நாம் பழைய மும்பையாக பார்க்கலாம். ரோஹித் அப்படி சிறப்பாக விளையாடவில்லை என்றால் மும்பை பிளே ஆப் சுற்றுக்கு கூட செல்வது கடினம் என்று தான் நினைக்கிறேன்” எனவும் மைக்கேல் வாகன்  பேசியுள்ளார்.

அவரை தொடர்ந்து பேசிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ” ரோஹித் தன்னுடைய கிரிக்கெட் வாழ்வின் மிகவும் முக்கியமான கட்டத்தில் இருப்பதாக நான் நினைக்கிறேன். மும்பை சறுகளை சந்தித்துக்கொண்டு இருக்கும் சூழலில் அணியை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் அவரிடம் இருக்கிறது. அவர் அடுத்தடுத்த போட்டிகளில் தன்னுடைய முழு அர்ப்பணிப்பை கொடுத்தால் தான் மும்பை அணியால் வெற்றிபெறமுடியும். அப்படி விளையாடினாள் தான் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும்” எனவும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

donald trump tariffs
maruthamalai - murugan vel
tn rain
Kane Williamson
waqfboard - tvk vijay
Trump's tariffs full list
trump tariffs