தனக்குத்தானே எக்ஸ் தளத்தை வியாபாரம் செய்த எலான் மஸ்க்.! வாங்குனது எவ்வளவு? விற்றது எவ்வளவு?
எலான் மஸ்க் தனது எக்ஸ் சமூக வலைதளத்தை தனக்குச் சொந்தமான எக்ஸ் ஏஐ நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளார.

அமெரிக்கா : உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், முன்னதாக ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட X-ஐ, தனது சொந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனமான xAI-க்கு 33 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒரு ஒப்பந்தத்தில் கீழ், விற்பனை செய்ததாக இன்று அறிவித்துள்ளார்.
எலான் மஸ்க் 2022 ஆம் ஆண்டு அக்டோபரில் X-தளத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார். அப்போதிருந்து, X-ன் மதிப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து பல விவாதங்கள் எழுந்தன. இப்போது, வெறும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அதை 33 பில்லியன் டாலருக்கு xAI-க்கு விற்றிருப்பது ஒரு ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது.
x AI என்பது மஸ்கால் 2023 இல் தொடங்கப்பட்ட ஒரு செயற்கை நுண்ணறிவு நிறுவனமாகும். இது மனித அறிவியல் கண்டுபிடிப்புகளை விரைவுபடுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. மேலும் இதன் முக்கிய தயாரிப்புகளில் ஒன்று “Grok” என்ற AI சாட்பாட் ஆகும். X-ன் தரவுகளைப் பயன்படுத்தி xAI-ன் AI மாதிரிகளை மேம்படுத்துவது இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
தனக்குத்தானே எக்ஸ் தளத்தை எலான் மஸ்க் விற்றது ஏன் என்று பார்த்தால்,இது ஒரு முழு பங்கு பரிவர்த்தனை என்று சொல்லப்படுகிறது. அதாவது பணம் செலுத்தப்படாமல், xAI-ன் பங்குகள் மூலமாகவே இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. இந்த ஒப்பந்தம் X-ஐ 33 பில்லியன் டாலராகவும், xAI-ஐ 80 பில்லியன் டாலராகவும் மதிப்பிடப்படுகிறது. இதன் மூலம், இரு நிறுவனங்களின் ஒருங்கிணைந்த மதிப்பு சுமார் 113 பில்லியன் டாலராக உள்ளது.
@xAI has acquired @X in an all-stock transaction. The combination values xAI at $80 billion and X at $33 billion ($45B less $12B debt).
Since its founding two years ago, xAI has rapidly become one of the leading AI labs in the world, building models and data centers at…
— Elon Musk (@elonmusk) March 28, 2025
மஸ்கின் கூற்றுப்படி, இதன் நோக்கமானது, “xAI-ன் மேம்பட்ட AI திறன்களையும், X-ன் மிகப்பெரிய பயனர் தளத்தையும் ஒருங்கிணைப்பதன் மூலம், இது AI மற்றும் சமூக ஊடகங்களை ஒருங்கிணைப்பதற்கான ஒரு புரட்சிகரமான முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.