கப் அடிக்குமா? “இல்ல இதுக்கு மட்டும் தான்”…ஆர்சிபியை கலாய்த்த அம்பதி ராயுடு!
இந்த ஆண்டு சென்னை அணி தான் கோப்பையை வெல்லவேண்டும் பெங்களூர் போன்ற அணி இறுதிப்போட்டிக்கு வேணும் எனவும் அம்பதி ராயுடு பேசியிருக்கிறார்.

பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே பெங்களூர் அணி கோப்பை வெல்லவில்லை என்பதை வைத்து பலரும் கலாய்த்து பேசுவது உண்டு. சில கிரிக்கெட் வீரர்களும் நக்கலாக இது குறித்து பேசுவது உண்டு. அப்படி தான், சென்னை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு சமீபத்தில் ஜாலியாக “பெங்களூர் பொழுதுபோக்கு அணி ” என தெரிவித்து இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” பெங்களூர் பற்றி பேசினால், அவர்கள் ஒவ்வொரு முறையும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட வரும் போது கோப்பையை வெல்லவேண்டும் என வருகிறார்கள்.
ஆனால் கோப்பையை வெல்ல முடியவில்லை. பேஷன், ஆரவாரம், ரசிகர்களின் ஆதரவு எல்லாம் பெங்களூர் அணிக்கு அதிகமாகவே இருக்கிறது. ஆனால் என்னைப்பொருத்தவரை பெங்களூர் அணி ரசிகர்களுக்கு பொழுதுபோக்கு காட்டுவதற்கு சிறந்த அணி. ஆனால், கோப்பையை வெல்ல சரியான அணியா என்று கேட்டால் தெரியவில்லை என்று தான் சொல்வேன்.
சென்னை அல்லது மும்பை போல வெற்றி பெறுவதற்கு உண்மையான திட்டமும் செயல்பாடும் தேவை, ஆனால் பெங்களூர் அணி அந்த விஷயத்தில் தான் தோல்வியடைகிறது” எனவும் தெரிவித்தார். மேலும், தொடர்ந்து பேசிய அம்பதி ராயுடு ” இந்த ஆண்டு பெங்களூர் அணி கோப்பையை வெல்லவேண்டும் என்பது எனக்கு ஆசையாக தான் இருக்கிறது.
ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சிறப்பான பார்மில் இருப்பதால் இந்த முறையும் சென்னை அணி வெல்லவேண்டும் என நாங்கள் அனைவரும் ஆசைப்படுகிறேன். இருந்தாலும் இந்த ஆண்டு இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடி சென்னை அணி தகுதிபெற்றது என்றால் பெங்களூர் போன்ற ஒரு அணி நமக்கு தேவை” எனவும் அம்பதி ராயுடு தெரிவித்தார். மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூர் அணியும் இன்று சேபாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மோதவுள்ள நிலையில், அம்பதி ராயுடு பெங்களூர் குறித்து பேசியது வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025