தவெகவில் விஜய்க்கே முழு அதிகாரம்., மும்மொழி கொள்கை, வக்பு சட்டத்திருத்தம்.., 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்!
தவெக முதல் பொதுக்குழுவில், கட்சித் தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம், மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு, வக்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு என 17 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டன.

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூர்ராமச்சந்திரா மஹாலில் நடைபெற்று வருகிறது. இதில் கட்சித் தலைவர் விஜய், பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார், ராஜ்மோகன் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த முதல் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைமை நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் என சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ளனர். அங்கு கட்சி நிர்வாகிகளுக்கு மட்டுமே அதிலும் பாஸ் வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. முதலில் உள்ளே கட்சி ஆட்களை தவிர மற்ற பத்திரிகையாளர்களுக்கு கூட அனுமதி உள்ளே மறுக்கப்பட்டது.
இப்படியான சூழலில் தான், இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றம் செய்யப்பட்ட தீர்மானங்கள் பற்றிய செய்திகள் வெளியாக தொடங்கின. அதில் சில தீர்மானங்கள் ஏற்கனவே கட்சித் தலைவர் விஜய் அறிக்கை வாயிலாக கூறிய கருத்துக்கள் இடம்பெற்று இருந்தன.
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தவெக முதல் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நீண்ட காலமாக போராடி வந்த மக்களை தான் தவெக தலைவர் விஜய் சந்தித்து பேசினார்.
வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி தவெக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது. இந்த சட்டதிருத்தத்திற்கு எதிராக நேற்று தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் சந்திப்பு மாநாடுகள், பொதுக் கூட்டங்கள், சுற்றுப் பயணங்கள், தேர்தல் சார்ந்த முடிவுகள் எடுப்பது என கட்சி சார்ந்த முழு அதிகாரத்தையும் முடிவெடுக்கும் உரிமையையும் கட்சியின் தலைவர் விஜய்க்கு அளித்து தவெக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மும்மொழிக் கொள்கையைத் திணிக்க முயலும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், தமிழ்நாட்டுக்கு எப்போதும் இருமொழிக் கொள்கை தான் என திட்டவட்டமாக தெரிவித்தும் தவெக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
டாஸ்மாக் ஊழல், தமிழகத்தில் சட்டஒழுங்கு சரியில்லை, பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியும், அரசு ஊழியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும், தொகுதி மறுவரையறை, மீனவர்கள் நலன் சார்ந்து, இலங்கை தமிழர்கள் நலன் சார்ந்து என மொத்தம் 17 தீர்மானங்கள் தவெக முதல் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025