விக்ரம் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி! வீர தீர சூரன் படத்திற்கு 4 வாரங்கள் தடை!
வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு விதித்த தடையை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்தது டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி : விக்ரம் நடிப்பில் உருவாகியிருந்த வீர தீர சூரன் திரைப்படம் இன்று மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவிருந்த நிலையில் திடீரென அதிர்ச்சியளிக்கும் விதமாக திரைப்படத்திற்கு முதலீடு செய்திருந்த மும்பையை சேர்ந்த B4U எனும் நிறுவனம் ஒப்பந்தத்தின் படி குறிப்பிட்ட தேதிக்குள் OTT உரிமையை விற்காததால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனக் கூறி 50% நஷ்டஈடு தரவேண்டும் என கூறி பட ரிலீசுக்கு தடை கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியது.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், டெல்லி நீதிமன்றம் இந்த வழக்கில் இன்று காலை 10.30 மணி வரை வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட டெல்லி நீதிமன்றம் தடை விதித்து இருந்தது. இதனால் இன்று படம் ரிலீஸ் ஆகுமா என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் காத்திருந்தனர். அதற்கு அடுத்ததாக வந்த அறிவிப்பில் B4U நிறுவன நஷ்டத்தை குறிப்பிட்டு ரூ.7 கோடி டெபாசிட் செய்துவிட்டு படத்தை ரிலீஸ் செய்யலாம் என பட தயாரிப்பு நிறுவனத்திற்கு டெல்லி நீதிமன்றம்உத்தரவிட்டது.
எனவே, நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, மார்ச் 27 அன்று காலை 10 மணிக்கு முன்பு திட்டமிடப்பட்டிருந்த அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன. அமெரிக்காவில் நடைபெறவிருந்த முன்னோட்டக் காட்சிகளும் (premiere shows) ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த சூழலில், விக்ரம் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் வகையில், வீர தீர சூரன் படத்திற்கு 4 வாரங்கள் தடை என தற்போது டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒப்பந்தப்படி OTT உரிமை விற்கப்படும் முன் படத்தின் ரிலீஸ் அறிவித்ததால் B4U நிறுவனம் தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது.