கட்சியில் இணயை தகுதி இல்லை..ஓ.பி.எஸ் உடன் இணைவது குறித்த கேள்விக்கு இபிஎஸ் சொன்ன பதில்!

அதிமுகவில் இருக்க ஓபிஎஸ்க்கு தகுதியில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Edappadi K. Palaniswami o panneerselvam

தூத்துக்குடி : எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, கடந்த சில ஆண்டுகளாக ஓ.பி.எஸ் தரப்புடன் ஏற்பட்ட மோதல்களால் தனியாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டு அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பி.எஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, அவரது ஆதரவாளர்களும் தனியாக இயங்கி வருகின்றனர். எனவே, உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில்  பேசுபொருளாக மாறியிருக்கும் சூழலில்,  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்) உடன் மீண்டும் இணைவது சாத்தியமே இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது  அதிமுகவின் உட்கட்சி அரசியலில் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் ஓ.பி.எஸ் உடன் இணைவது குறித்த  கேள்வியை எழுப்பினார்கள். அந்த கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி ” பிரிந்தது பிரிந்தது தான் இணைவதற்கெல்லாம் சாத்தியமே கிடையாது. ஏனென்றால், பிரிந்தது மட்டுமில்லை இந்த கட்சி எதிரிகளிடம் அடைமானம் வைப்பதை என்னால் பார்க்க முடியாது. அதிமுக அலுவலகத்தில் ரவுடிகள் மூலம் ஓபிஎஸ் தலைமையில் ரவுடிகளை அழைத்து சென்று உடைத்தார்.

கட்சி தலைமை கோவில் போன்றது அதனை என்றைக்கு உடைத்தார்களோ அன்றைக்கே அவர் கட்சியில் இருப்பதற்கு தகுதி இல்லை. அந்த அடிப்படையில் அவரை கட்சியில் இணைத்துக்கொள்ளும் வாய்ப்பே இல்லை. கட்சியில் இருந்து விலகியவர்கள் இப்போது மீண்டும் இணைந்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் கூட பலரும் இணைந்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால்,

தேர்தல் நெருங்கும் பொழுது கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெறும் நிச்சயம் நடைபெறும். அதிமுகவை பொறுத்தவரை திமுகவைத் தவிர வேறு எந்த கட்சியும் எங்களுக்கு எதிரியல்ல எங்களுக்கு தெளிவான பாதை உள்ளது, அதில் உறுதியாக பயணிப்போம்,” எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
japan megaquake
BJP State president K Annamalai
Heavy rains
ed chennai high court
Nainar Nagendran and cm
mumbai indians rohit sharma