RR vs KKR : வெற்றிக்கான மோதல்! கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு… பிளேயிங் லெவனில் மாற்றம்.!
கொல்கத்தா அணியில் உடல்நிலை சரியில்லா காரணத்தால் சுனில் நரைனுக்கு பதிலாக மொயீன் அலி களமிறங்குகிறார். ராஜஸ்தான் அணியில் ஃபரூக்கிவுக்கு பதிலாக ஹசரங்கா இடம்பெற்றுள்ளார்.

கவுகாத்தி : ஐபிஎல் 2025-ன் ஆறாவது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது.
இப்பொது (7 மணி அளவில்) டாஸ் போடப்பட்டு, பிளேயிங் லெவனும் அறிவிக்கப்பட்டது. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் அஜிங்க்யா ரஹானே பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனால், முதலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய போகிறது.
இதனிடையே, இரு அணிகளில் வீர்ரகள் மாற்றம் செய்துள்ளது. கொல்கத்தா அணியில் உடல்நிலை சரியில்லா காரணத்தால் சுனில் நரைனுக்கு பதிலாக மொயீன் அலி களமிறங்குகிறார். அதே நேரம், ராஜஸ்தான் அணியில் ஃபரூக்கிவுக்கு பதிலாக ஹசரங்கா இடம்பெற்றுள்ளார்.
இரு அணிகளும் தங்கள் முதல் போட்டிகளில் தோல்வியடைந்ததால் இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானது. முதல் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆர்சிபியிடம் 7 விக்கெட் வித்தியாசத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் 44 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடமும் தோல்வி அடைந்தன.
இதனால், 2 அணிகளும் முதல் வெற்றியை குறிவைத்துள்ளன. போட்டி நடக்கும் கவுகாத்தி மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது. மேலும், இந்த இரண்டு அணியும் சரிசம பலத்துடன் இருப்பதால் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 30 போட்டிகளில் விளையாடி தலா 14-ல் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டிகளுக்கு முடிவில்லை. கவுகாத்தி மைதானத்தில் நடைபெறவுள்ள இன்றைய போட்டியில் வெல்லப் போவது ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தானா? ரஹானேவின் கொல்கத்தாவா? என்று காத்திருந்து பார்க்கலாம்.
வீரர்கள்
கொல்கத்தா அணி :
கேப்டன் அஜிங்க்யா ரஹானே தலைமையிலான அணியில், குயின்டன் டி காக், வெங்கடேஷ் ஐயர், ரின்கு சிங், மொயின் அலி, ஆண்ட்ரே ரஸ்ஸல், ரமன்தீப் சிங், ஸ்பென்சர் ஜான்சன், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ராஜஸ்தான் அணி :
கேப்டன் ரியான் பராக் தலைமையிலான அணியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.