உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை …!அதிரடியாக உயர்த்தப்பட்ட கட்டணம் ….!ரூ.5 முதல் ரூ.15 வரை உயர்வு…!பொதுமக்கள் கடும் அவதி
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சென்னையில் ஷேர் ஆட்டோக்களில் கட்டணம் ரூ.5 முதல் ரூ.15 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதனால் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வந்த எண்ணெய் நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதன் விலையை அதிகரித்து வந்தது .
இதனிடையே கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை எட்டியது. லிட்டருக்கு ரூ.80-ஐ தாண்டியுள்ள பெட்ரோல் விலையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஆனால் மத்திய அரசு அளித்த விளக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவாலேயே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது என்று தெரிவித்தது.
இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சென்னையில் ஷேர் ஆட்டோக்களில் கட்டணம் ரூ.5 முதல் ரூ.15 வரை உயர்த்தப்பட்டுள்ளது.குறிப்பாக திருமங்கலம்-அண்ணா நகர், போரூர்-கிண்டி, அண்ணா நகர், தியாகராய நகர் வழித்தடத்தில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.இன்னும் வேறு என்னென்ன கட்டணங்கள் உயரும் என்ற பீதியில் மக்கள் அனைவரும் உள்ளனர்.