ப்ரோ தோனி மாதிரி ட்ரை பண்ணிருக்காரு! பண்ட் குறித்து ராயுடு என்ன சொல்லுறாரு பாருங்க!

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தோல்விக்கு லக்னோ சுழற்பந்துவீச்சாளர்கள் தான் காரணம் என சென்னை முன்னாள் வீரர் ராயுடு தெரிவித்துள்ளார்.

csk ms dhoni and ambati rayudu

டெல்லி :  ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோஅணி, ஐபிஎல் 2025 சீசனின் முதல் ஆட்டத்தில் டெல்லி அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 210 ரன்கள் எடுத்தது, முதலில் இருந்தே தடுமாறி விளையாடி வந்த டெல்லி அணி கடைசி நேரத்தில் 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

லக்னோ அணியில் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களான ஆகாஷ் தீப், அவேஷ் கான், மோஹ்சின் கான் மற்றும் மயங்க் யாதவ் ஆகியோர் காயம் காரணமாக விளையாடவில்லை. இவர்கள் இல்லாதது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தான் லக்னோ தோல்வி அடைந்தது எனவும் சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் ஓடி கொண்டு இருக்கிறது.

இந்த சூழலில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராயுடு ESPNCricinfo-செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பேசும்போது ” பண்ட் தோனியின் கேப்டன் சியை காப்பி அடித்துவிட்டார் என்பது போல பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” அந்த மைதானத்தில் ஸ்பின்னர்களை இறுதி ஓவர்களில் பயன்படுத்துவது தோனியின் பாணி தான்.

தோனி அந்த பாணியை கடை பிடிப்பதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். மெதுவான பிட்ச்களில் ஸ்பின்னர்களை திறம்பட பயன்படுத்தி ஆட்டத்தை மாற்றுவதில் அவர் சிறந்தவர் என்பதை நான் சொல்லி தெரியவேண்டிய அவசியம் இல்லை. அதுவும் போட்டியை வெல்வதற்கு ஒரு சிறப்பான திட்டம் என்பதால்  டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பண்ட் அதை முயற்சி செய்திருக்கலாம் என நினைக்கிறேன்.

அந்த சிறப்பான திட்டத்தை அவர் எண்ணத்தில் கொண்டு வந்து செயல்படுத்தினால் அவரது ஸ்பின்னர்கள் அவரை ஏமாற்றிவிட்டனர் என்று தான் உண்மையைச் சொல்ல வேண்டும். மற்றபடி, இது கேப்டன்ஷியின் தவறு இல்லை, அவர்களுடைய பந்துவீச்சு தான் போட்டியை மாற்றி தோல்வியை கொடுத்துள்ளது. தோனி செய்ததை பார்த்து அப்படியே பண்ட் செய்தாலும் பந்துவீச்சாளர்கள் கோட்டை விட்டுவிட்டனர். ஸ்பின்னர்கள் தேவையான கட்டுப்பாட்டையோ அல்லது விக்கெட்டுகளையோ பெற முடியவில்லை. மற்றபடி அவருடைய கேப்டன்சி நன்றாக தான் இருக்கிறது” எனவும் ராயுடு பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்