உங்களுக்கு பிடித்த ஐபிஎல் டீம் எது? நைசாக பதில் சொல்லி நழுவிய விக்ரம்!

சென்னை அணி தான் என்னுடைய மனதிற்கு நெருக்கமான அணி என விக்ரம் வீர தீர சூரன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

Vikram

ஹைதராபாத் :  நடிகர் விக்ரம் தற்போது வீர தீர சூரன் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. சென்னை, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு படக்குழு சென்று படத்தை பற்றி பேசி வருகிறார்கள்.

அந்த வகையில், இன்று ஹைதாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர், விக்ரம், எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் ஒருவர் விக்ரமிடம் உங்களுக்கு பிடித்த ஐபிஎல் அணி எது? என கேட்டார். அதற்கு பதில் அளித்த விக்ரம் ஒரு அணியின் பெயரை சொன்னால் சரியாக இருக்காது சமூக வலைத்தளங்களில் நாம ட்ரெண்டிங்கில் வந்துவிடுவோம் என்பதை உணர்ந்து மழுப்பலான பதிலை அளித்தார்.

அந்த கேள்விக்கு பதில் அளித்த விக்ரம் ” எனக்கு ஹைதராபாத் அணி தான் மிகவும் பிடிக்கும் என கூறிவிட்டு சிரித்தார். ஏனென்றால், அவர் ப்ரோமோஷன் செய்ய சென்ற இடம் ஹைதராபாத் என்பதால்  இந்த பதிலை அளித்தார். அதனை தொடர்ந்து கொல்கத்தா போனால் எனக்கு கொல்கத்தா பிடிக்கும்..நாளைக்கு பெங்களூர் போறோம் அங்கு சென்றால் எங்களுக்கு பெங்களூர் பிடிக்கும்” என கூறினார்.

இந்த அணிகளை பெயரை கூறிவிட்டு சிரித்த விக்ரம் சென்னை பெயரை சொல்லவில்லை என்பது உணர்ந்து கொண்டு நான் மேலே கூறிய அணிகள் எனக்கு பிடிக்கும் என்னுடைய மனதிற்கு நெருக்கமான அணி என்றால் சென்னை தான்” எனவும் பதில் அளித்தார். சென்னை பெயரை சொல்லவில்லை என்றால் சென்னை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவரை திட்டி தீர்த்துவிடுவார்கள் என்பதால் உடனடியாக சென்னை பெயரையும் சொல்லி நைசாக விக்ரம் நழுவியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்