43 வயதாகினாலும் வேகம் குறையல… தோனியின் டாப் 4 மின்னல் வேக சூப்பர் ஸ்டம்பிங்!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஐபிஎல் வரை, தோனி தொடர்ந்து வேகமான ஸ்டம்பிங்குகளுக்கு புதிய சாதனைகளை படைத்து வருகிறார்.

DhonI - fast stumpings

சென்னை : நேற்றைய தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2025 சீசனின் 3-வது போட்டியில் தோனி, சூர்யகுமார் யாதவை வெறும் 0.12 விநாடிகளில் ஸ்டெம்பிங் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இந்த வேகமான ஸ்டெம்பிங், தோனியின் திறமையையும் அவரது மின்னல் வேகத்தையும் மீண்டும் ஒரு முறை நிரூபித்து காட்டியுள்ளது.

இதைத் தொடர்ந்து, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தோனியின் இந்த சாதனையை கொண்டாடி வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஐபிஎல் வரை, தோனி தொடர்ந்து வேகமான ஸ்டம்பிங்குகளுக்கு புதிய சாதனைகளை படைத்து வருகிறார்.

தோனி நேற்று 0.12 விநாடிகளில் சூர்யகுமார் யாதவை ஸ்டெம்பிங் செய்ததை அடுத்து, அவர் தனது விதிவிலக்கான விக்கெட் கீப்பிங் திறமையால், மீண்டும் மீண்டும் பேட்ஸ்மேன்களையும் ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ஆனால், இது அவரின் 4 வது அதிவேக ஸ்டெம்பிங் தான்.

இதற்கு முன் தோனியின் அதிவேக ஸ்டெம்பிங் 0.01 விநாடிகள் ஆகும். அது 2023 ஆம் ஆண்டின் பைனலில் சுப்மன் கில்லை ஸ்டெம்பிங் செய்தார். இதை தவிர, 2018 ஆம் ஆண்டு நடந்த T20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கீமோ பாலுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டது. அந்த நொடியில், தோனி கண் இமைக்கும் நேரத்தில் பந்தை பிடித்து ஸ்டெம்பிங் செய்தார்.

அதே போல, 2012 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில், தோனி வெறும் 0.09 வினாடிகளில் ஸ்டம்பிங் செய்து மிட்செல் மார்ஷை வெளியேற்றினார். இதையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது, தோனி 43 வயதில் இவ்வளவு வேகமாக செயல்பட்டது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்