மயங்க் யாதவ் எப்போது அணிக்கு திரும்புவார்? பயிற்சியாளர் லாங்கர் கொடுத்த முக்கிய தகவல்!

இரண்டு வாரங்களுக்கு பிறகு தான் மீண்டும் மயங்க் யாதவ் அணிக்கு திரும்ப வாய்ப்புகள் உள்ளது என ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். 

Mayank Yadav

டெல்லி : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள போட்டியை லக்னோ அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ACA-VDCA கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் ரசிகர்களுடைய பெரிய கவலையாக இருக்க கூடிய விஷயம் என்னவென்றால் போட்டியில் லக்னோ அணியின் வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் விளையாடுவாரா இல்லையா? என்பது தான். ஏனென்றால், அவருடைய காயம் இன்னும் சரியாகவில்லை என்பதால் அவர் விளையாடுவாரா இல்லையா என்பது குறித்த தெளிவான தகவல் இதுவரை வெளியாகாமல் இருந்தது.

இந்த சூழலில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியோட தலைமை பயிற்சியாளர் லாங்கர் சமீபத்தில் அளித்த பேட்டியில் மயங்க் யாதவ் உடல் நிலை எப்படி இருக்கிறது எனவும் அவர் அணிக்கு எப்போது திரும்புவார் என்பது பற்றிய தகவலையும் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” கடந்த ஆண்டு முதல் மயங்க் யாதவ் சிறப்பாக விளையாடி வந்தார். திடீரென படுக்கையில் தன்னோட கால்விரலை இடிச்சிகிட்டாரு. இதனால் அவர் கால் பகுதியில் காயம் ஏற்பட்டுவிட்டது.

அவர் எப்போது அணிக்கு திரும்புவார் என ரசிகர்களை போலவே நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம். முன்னதாக ஒரு வாரத்தில் திரும்ப வாய்ப்பு இருப்பதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்தது. ஆனால், இப்போது அவர் மீண்டும் அணிக்கு திரும்புவதற்கு 2 வாரங்கள் ஆகலாம். இந்த இரண்டு வாரங்களில் அவர் பழைய நிலைமைக்கு திரும்பி மீண்டும் பழையபடி விளையாடுவார் என நான் எதிர்பார்க்கிறேன். இப்போது அவரால் எழுந்து ஓட முடிகிறது அவர் பந்து வீசும் வீடியோக்களையும் தொடர்ந்து பார்த்து வருகிறறோம்.

நேற்று கூட அவர் பந்துவீசும் வீடியோவை பார்த்தேன். அவர் கிட்டத்தட்ட பாதி பழைய நிலைமைக்கு திரும்பிவிட்டார். இன்னும் சில நாட்களில் பழையபடி அணிக்கு திரும்பி விளையாடுவார் என ஆவலுடன் காத்திருக்கிறேன்” எனவும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியோட தலைமை பயிற்சியாளர்  லாங்கர் முக்கியமான தகவலை தெரிவித்திருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்