சென்னையை சமாளிக்க அவுங்க இல்லைனா என்ன? வேற ஆள் இருக்காங்க…சூரியகுமார் யாதவ் அதிரடி!

சென்னைக்கு எதிரான போட்டியில் வெற்றிபெறுவோம் என மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

SuryakumarYadav

சென்னை : நாளை நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் – மும்பை இந்தியன்ஸ் அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளனர். இந்த இரண்டு அணிகளுக்கும் இந்த சீசனில் இது தான் முதல் போட்டி என்பதால் ரசிகர்களுக்கு மத்தியில் பெரிய எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது.  இந்த சூழலில், நாளை நடைபெறும் இந்த போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி கொண்டு இருக்கிறார்கள். நாளை நடைபெறும் போட்டியில் மும்பை அணியில் பும்ரா, ஹர்திக் இருவரும் விளையாடமாட்டார்கள் என்பது அணிக்கு ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ரசிகர்களும் இருவரும் இல்லை என்றால் கொஞ்சம் மும்பை அணிக்கு பலம் குறையுமே என சமூக வலைத்தளங்களில் பேசிக்கொண்டு வருகிறார்கள். ஆனால், இந்த கேள்வியை கேப்டன் சூரியகுமார் யாதவிடம் கேட்டதற்கு அவர் மிகவும் கூலாக பதில் அளித்துவிட்டு சென்றார். போட்டிக்கு முன்னதாக பயிற்சியின் போது செய்தியாளர்களை சந்தித்த சூரியகுமார் யாதவிடம் செய்தியாளர்கள் பல கேள்விகளை கேட்டனர். அப்போது நாளை சென்னைக்கு எதிரான போட்டியில் பும்ரா..பாண்டியா இல்லை இது அணிக்கு பின்னடைவா? என கேள்வி எழுப்பினார்.

அந்த கேள்விக்கு பதில் அளித்த சூரியகுமார் யாதவ் ” அவர்கள் இருவரும் இல்லை என்றால் என்ன சென்னை அணியை சமாளிக்க எங்களுடைய அணியில் இன்னும் பல வீரர்கள் இருக்கிறார்கள். எனவே, முடிந்த அளவுக்கு எவ்வளவு சிறப்பாக விளையாடமுடியுமோ அப்படியே விளையாடுவோம்” எனவும் சூரியகுமார் யாதவ்  பதில் அளித்தார்.

அதனைத்தொடர்ந்து மற்றோரு செய்தியாளர் ” மும்பை அணி முதல் போட்டிகளை வெல்வது இல்லை அது பற்றி உங்களுடைய கருத்து என்ன? என கேட்டனர். அதற்கு பதில் அளித்த சூரியகுமார் யாதவ் ” நீங்களே சொல்லிவிட்டீர்கள் முதல் போட்டியில் கண்டிப்பாக வெற்றிபெற்றுவிடுவோம். சென்னை அணி சுழற்பந்துவீச்சாளர்களை சிக்ஸர் மூலம் சமாளிக்க போகிறோம்” எனவும் அதிரடியாக சூரியகுமார் யாதவ் பதில் அளித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்