ரூ.150 கோடி ஊழலுக்கே உடனடி கைது? தமிழகத்தில் ஏன் இல்லை? சீமான் கேள்வி!
டாஸ்மாக்கில் மட்டும் முறைகேடு நடைபெறவில்லை எனவும் கழிவறை பராமரிப்பு உள்ளிட்டவற்றிலும் ஊழல் நடைபெறுகிறது என சீமான் கூறியுள்ளார்.

சென்னை : தமிழக அரசியல் வட்டாரத்தில் டாஸ்மாக் உழல் விவகாரம் என்பது பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த விவகாரம் குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் ராமநாதபுரம் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது “டாஸ்மாக்கில் மட்டும் முறைகேடு நடைபெறவில்லை… கழிவறை பராமரிப்பு உள்ளிட்டவற்றிலும் ஊழல் நடைபெறுகிறது” என இந்த விவகாரம் குறித்து பேசியிருக்கிறார்.
அப்போது பேசிய சீமான் ” இந்த விவகாரம் குறித்த கேள்வியை என்னுடைய தம்பி அண்ணாமலையிடம் கேளுங்கள்..நான் அவரிடம் கேட்டுக்கொண்டது என்னவென்றால், டாஸ்மாக் விவகாரத்தை போல கழிவறை பராமரிப்பு உள்ளிட்டவற்றிலும் ஊழல் நடைபெறுகிறது அதனைப்பற்றியும் பேசுங்கள் என்று சொன்னேன். அதைப்போல, மக்களுக்கு விநோயோகம் செய்யும் ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்லப்படும் அரிசி மூட்டைகளை ஏற்றி இறங்கியதில் சுமார் ரூ. 1000 கோடி இழப்பு நடந்திருக்கிறது என சொல்கிறார்கள்.
இதனை எப்படி நம்ப முடியும்? உலகத்திற்கே தெரியும் செந்தில் பாலாஜி மதுவை விலை ஏற்றிவிற்றார் என்று மக்கள் சொன்னதை பார்த்தோம். அந்த காசு முழுவதும் யாருக்கு? அம்மையார் ஜெயலலிதா இருக்கும்போது அதிமுக ஆட்சியில் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மதுக்கடைகள் திறந்திருந்தன..ஆனால், இப்போது விடிய விடிய கடைகள் திறந்திருக்கிறது. டெல்லியில் ரூ.150 கோடி மதுபான கொள்கை ஊழல் எனக்கூறி கெஜ்ரிவால் மீது உடனடியாக நடவடிக்கை பாய்ந்தது.
ஆனால் தமிழத்தில் டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் என்று கூறுகிறார்கள் இது அதை விட 10 மடங்கு அதிகமாக இருக்கிறது. எனவே, அப்படி இருந்த பிறகும் ஏன் உடனடி நடவடிக்கை இல்லை? டாஸ்மாக்கில் இப்படி ஊழல் நடந்திருக்கிறது எனவே யாரை எதிர்த்து போராடுனீர்கள்? நடவடிக்கை எடுங்கள் என்று யார் மீது குற்றச்சாட்டு வைத்து போராடுனீர்கள்? என்னைப்பொறுத்தவரை நாடக ஆசிரியர் முதல்வர் ஆனார்..இப்போது அவர் மகன் முதல்வராக இருக்கிறார். இப்பொது அதே நாடகம் தொடர்ந்து அரங்கேறிக்கொண்டு இருக்கிறது” எனவும் சீமான் தெரிவித்தார்.