IPL 2025 : அலப்பறை ஸ்டார்டிங் பிரண்ட்ஸ்! சென்னை -மும்பை போட்டியை தொடங்கி வைக்கும் அனிருத்!
நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 6.30 மணியில் இருந்து அலப்பறை ஆரம்பம் என இசையமைப்பாளர் அனிருத் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சென்னை : இன்று ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்போகிறது என்றாலும் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருப்பது என்றால் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள சென்னை – மும்பை போட்டிக்கு தான். இந்த இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் போட்டிகள் என்றாலே விறு விருப்புக்கு பஞ்சம் இருக்காது. ஐபிஎல்லில் எல்-கிளாசிகோ என்றால் இந்த இரண்டு அணிகள் மோதும் போட்டியை தான் சொல்வார்கள்.
இந்த போட்டிக்கு எந்த அளவுக்கு எதிர்பார்ப்புகள் இருக்கிறது என்பதை சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அதற்கு உதாரணம் சொல்லவேண்டும் என்றால் நாளை நடைபெறவுள்ள போட்டிக்கான டிக்கெட் முன் பதிவு கடந்த மார்ச் 19-ஆம் தேதி தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களில் மின்னல் வேகத்தில் டிக்கெட்கள் அனைத்தும் விற்று தீர்ந்தது. அதனை வைத்தே எந்த அளவுக்கு இந்த போட்டியின் மீது எதிர்பார்ப்பு இருக்கிறது என்பதை சொல்லிவிடலாம்.
எனவே, இப்படியான ஸ்பெஷலான போட்டியில் கூடுதல் ஸ்பெஷல் கொடுக்கும் வகையில் சென்னை அணி நிர்வாகம் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பயந்துகொண்டு இருக்கும் இசையமைப்பாளர் அனிருத்தை களத்திற்கு எடுத்து வந்திருக்கிறது. மும்பை அணிக்கு எதிராக விளையாடும் அந்த போட்டி தான் சென்னைக்கு முதல் போட்டி என்பதாலும் அந்த போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவிருக்கும் காரணத்தாலும் ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதால் மைதானத்தில் போட்டிக்கு முன்னதாக இசையமைப்பாளர் அனிருத் இசைகச்சேரி நடைபெறவுள்ளது.
போட்டி வழக்கம் போல 7.30 க்கு தொடங்கும்..அதற்கு முன்னதாக அதாவது 6.30 மணியில் இருந்து போட்டி தொடங்குவதற்கு முன்பு வரை இசையமைப்பாளர் அனிருத் இசை கச்சேரி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் தீவிரமான சென்னை ரசிகர் என்பதால் வழக்கம் போல எனர்ஜியுடன் பாடி ரசிகர்கள் உற்சாகப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சிக்கு முன்னதாக அவர் தனது குழுவுடன் பாடல் பாடி ஒத்திகை பார்த்துக்கொண்டு வீடியோவும் வைரலாகி வருகிறது.
Anirudh Getting Ready for Tomorrow 🔥#MSDhoni #CSKvMI pic.twitter.com/9Eonvpg8BK
— Chakri Dhoni (@ChakriDhonii) March 22, 2025